விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் தலைமுடி கலைந்து இருப்பதைக் காட்டும் பல புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏன் தனது தலைமுடியைக் கட்டிக்கொள்ளவில்லை என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளனர். சமீபத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை "காட்டு முடி கொண்ட பெண்மணி" என்று கேலி செய்தார்.
டிரம்பபின் பேச்சு உடனடியாக சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் இணையம் மீம்ஸ்களால் நிரம்பி வழிந்தது. இப்போது பலரிடமும் உள்ள கேள்வி என்னவென்றால், சுனிதா ஏன் விண்வெளியில் தனது தலைமுடியை கட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்.
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை, அதாவது வழக்கமான முடி பிரச்சினைகள் விண்வெளியில் பெரிய விஷயமாக இருக்காது. பூமியில், ஈர்ப்பு விசை முடியை கீழ்நோக்கி இழுக்கிறது, இதனால் மக்களின் முடி கீழ்நோக்கியும் சிக்கலாகவும் இருக்கும். ஆனால் விண்வெளியில் முடி எந்த பிரச்சனையும் இல்லாமல் மிதக்கிறது.
சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? மீண்டு வருவது எப்படி?
விண்வெளி வீரர்கள் வேலை செய்யும் போது தங்கள் கண்களில் முடி விழும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. விண்வெளியில், முடி கண்களை மறைக்காது, எனவே முடியைக் கட்டவேண்டிய அவசியமில்லை. ஈர்ப்பு விசை இல்லாத நிலையில், முடி சிக்கலாகவோ அல்லது முடிச்சுகளாகவோ ஆகும் ஆபத்தும் இல்லை.
பூமியில், முடி சிக்காமல் இருக்க தொடர்ந்து தலையைச் சீவ வேண்டும். ஆனால் விண்வெளியில் நீங்கள் அதைச் செய்யத் தேவையில்லை. அங்கு முடி காற்றில் மிதந்துகொண்டே இருப்பதால், முடியில் சிக்கு விழும் வாய்ப்பு குறைகிறது. விண்வெளியில் உள்ள சூழ்நிலையில், ஒருவர் பல மாதங்கள் பல் துலக்காமலேகூட இருக்க முடியும்.
சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்! நடுக்கடலில் வேற லெவல் சம்பவம்!