கடற்படையில் மலர்ந்த காதல்! சுனிதா வில்லியம்ஸின் குடும்பப் பின்னணி!

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விண்வெளி சாதனைகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. அவரது கணவர் மைக்கேல் வில்லியம்ஸ், காதல் கதை, குடும்பப் பின்னணி மற்றும் செல்லப்பிராணிகள் பற்றியும் கூறுகிறது.

Sunita Williams husband Michael J. Williams and family details sgb

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது அசாதாரண விண்வெளி பயணத்தின் மூலம் உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவரது விண்வெளி சாதனைகளுக்கு கணவர் மைக்கேல் ஜே. வில்லியம்ஸ் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

மைக்கேல் தனது மனைவி சுனிதாவின் விண்வெளி பயணங்களின்போது குடும்பத்திற்குப் பக்கபலமாக இருக்கிறார். விண்வெளியில் பயணம் செய்துவிட்டு வரும்போது, பாதுகாப்பான சூழலுக்குத் திரும்புவதை எப்போதும் உறுதி செய்கிறார் மைக்கேல்.

Latest Videos

சுனிதா வில்லியம்ஸின் கணவர் (Sunita Williams Husband)

சுனிதா வில்லியம்ஸின் கணவர் மைக்கேல் ஜே. வில்லியம்ஸ் ஒரு அமெரிக்கர். சட்ட அமலாக்க முகவராக நீதித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், சட்ட அமலாக்கத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளைச் செய்கிறார். விண்வெளி வீராங்கனையாக மாறுவதற்கு முன்பு சுனிதா ஒரு ஹெலிகாப்டர் விமானியாக இருந்தார். இருவருக்கும் இடையே இருந்த ஒரே மாதிரியான விருப்பங்கள் அவர்களை ஒன்றிணைத்துள்ளன.

உலகின் மிகவும் பிரபலமான விண்வெளி வீராங்கனையை மணந்திருந்தாலும், மைக்கேல் மிகவும் இயல்பாக இருக்கிறார். மனைவி சுனிதாவின் தொழில்முறை வாழ்க்கையில் திரைக்குப் பின்னால் இருந்து ஊக்கம் அளிக்கிறார்.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் ஏன் தலைமுடியைக் கட்டவில்லை?

சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams love story)

சுனிதா, மைக்கேல் இருவரும் 1987 இல் மேரிலாந்தின் அன்னாபோலிஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாடமியில் ஒன்றாகப் படித்தனர் அப்போதுதான் இவர்களின் காதல் விவகாரம் தொடங்கியது. இருவருக்கும் கடற்கடை பணியில் இருந்த பொதுவான ஆர்வம் அவர்களுக்குள் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியது. அந்த நட்புதான் மெல்ல வளர்ந்து காதலாக மலர்ந்தது.

பின், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் திருமணம் பிரபலங்களின் ஆடம்பரமான திருமணங்களைப் போலல்லாமல் எளிமையாக இருந்தது.

இந்து மதத்தை பின்பற்றும் மைக்கேல் ஜே. வில்லியம்ஸ், சுனிதாவின் ஆன்மிக விருப்பத்திற்கும் ஆதரவாக உள்ளார். சுனிதா தனது விண்வெளி பயணத்தின்போது, ​​பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் போன்ற இந்துமத நூல்களையும் ஓம் சின்னத்தையும், சிவபெருமானின் படத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்! நடுக்கடலில் வேற லெவல் சம்பவம்!

சுனிதாவின் செல்லப்பிராணிகள் (Sunita Williams' pets)

சுனிதாவும் மைக்கேலும் பெற்றோர் ஆகவில்லை. ஆனால் இருவரும் விலங்குகளை நேசிக்கிறார்கள். செல்லப்பிராணிகளுடன் தனி பிரியம் கொண்டவர்கள். சுனிதா ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறார். ஆனால் அவர்கள் இன்னும் இதைப்பற்றி முடிவுசெய்யவில்லை.

சுனிதா வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளான ஜாக் ரஸ்ஸல் டெரியர், கோர்பி இரண்டும் நேஷனல் ஜியோகிராஃபிக்கில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர கன்னர், பெய்லி, ரோட்டார் என மேலும் மூன்று செல்லப்பிராணிகளும் உள்ளன. அவற்றை குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் குடும்பப் பின்னணி: (Sunita Williams family background)

சுனிதா வில்லியம்ஸ் உர்சுலின் போனி ஜலோகர் - தீபக் பாண்ட்யா ஆகியோரின் மகளாக 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். சுனிதா வில்லியம்ஸ் பன்முக கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர். அவரது தந்தை தீபக் பாண்ட்யா குஜராத்தின் ஜூலாசனைச் சேர்ந்தவர். ஆனால் படித்து தொழில்முறையாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் 1950களில் தனது முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவ ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் பணிபுரிந்தார்.

சுனிதாவின் தாயார், ஸ்லோவேனியன்-அமெரிக்கரான உர்சுலின் போனி ஜலோகர். இவர் தனது மகளின் விண்வெளிப் பயண அர்ப்பணிப்பை எப்போதும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த நேர்காணல்களில், சாதனை படைத்த சுனிதாவைப்பற்றி பெருமைப்படுவதாகக் கூறினார். தனது மகள் தான் விரும்பும் ஒன்றைச் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

சுனிதா வில்லியம்ஸ் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்? மீண்டு வருவது எப்படி?

click me!