மளமளவென 70 நாடுகளுக்கு பரவியது உருமாறிய கொரோனா.. அமெரிக்காவில் மீண்டும் வேகமெடுத்தது வைரஸ். அலறும் WHO.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 4:14 PM IST
Highlights

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கே மீண்டும் நோய்த்தொற்று விகிதம்  அதிகரிக்க தொடங்கியுள்ளது. தடுப்பூசி போட்ட 100 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவில் அதன் விகிதம் குறையும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ராசெல் வாலன்ஸ்கி கூறியுள்ளார்.  

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபட்ட கொரோனா வைரஸ் சுமார் 70  நாடுகளுக்கு பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மீண்டும் அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி பேர் இழப்பை ஏற்படுத்தியது. தற்போது அது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. உலக அளவில் இந்த வைரசுக்கு 10.14 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அந்த வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை உலக அளவில் 21 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் கடந்த மாதங்களில் தென்பட்ட மாறுபட்ட புதியவகை covid-19 மிகவும் ஆபத்தானது என்றும், இதுவரை அந்த வைரஸ் 70 நாடுகளில் பரவியுள்ளது என்றும்  இது பழைய வைரசை காட்டிலும் வேகமாக பரவக்கூடியது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. மாறுபாடு கொண்ட வைரசுக்கு B.1.1.7 அல்லது VOC 2020 12/01 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பிரிட்டன், டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இது நிம்மதி அளிக்கும்  தகவல் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

மேலுத், கடந்த வாரம் உலக அளவில் நோய்த்தொற்று விகிதம் 15 சதவீதம் குறைந்து விட்டது என்றும், நோய்த்தொற்று தொடங்கிய ஒரு வாரத்தில் மிக குறைந்த அளவு பதிவானது இதுவே முதல்முறையாகும். கடந்த வாரம் உலகம் முழுவதும் மொத்தம் 41 லட்சம் தொற்றுகள் பதிவாகின. மொத்த  இறப்பு விகிதம் 48 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 16% , கிழக்கு ஆசியாவில் 5 சதவீதமாகவும்  தோற்று விகிதம் குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கே மீண்டும் நோய்த்தொற்று விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தடுப்பூசி போட்ட 100 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவில் அதன் விகிதம் குறையும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ராசெல் வாலன்ஸ்கி கூறியுள்ளார். 

அமெரிக்காவின் நிலைமை கட்டுக்குள் வர சிறிது காலம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 1 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களுக்கு தொற்று ஏற்பட்டால் 90 நாட்கள் காத்திருந்து பின்னர் அவர்கள் தடுப்பூசி போட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசியில் இருந்து  நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கூடுதல் தகவல்களை நாம் ஆராய்ந்து வருகிறோம். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!