அமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள்.. ஜோ பைடன், கமலா ஹாரிஸ் எடுத்த அதிரடி சரவெடி முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2021, 11:20 AM IST
Highlights

இந்திய வம்சாவளி வழக்கறிஞரான நீரா தாண்டன் வெள்ளை மாளிகை தலையாய பொறுப்பான பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பைடன் நிர்வாக பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் இவர் இப் பதவியில் அமரும் முதல் பெண் ஆவார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய நிர்வாகத்தில் நிதி சுகாதாரம் எரிசக்தி வெளியுறவுத்துறை தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமனம் செய்துள்ளார். அவர்களின் குறித்த விவரங்கள் பின்வருமாறு: 

இந்திய வம்சாவளி வழக்கறிஞரான நீரா தாண்டன் வெள்ளை மாளிகை தலையாய பொறுப்பான பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பைடன் நிர்வாக பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் இவர் இப் பதவியில் அமரும் முதல் பெண் ஆவார். 

வேதாந்த் பாட்டில்: வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வேதாந்த் பாட்டில் குஜராத் மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் அவர்.

அதுல் கவாண்டே: மராட்டிய மாநிலத்தைச்  பூர்வீகமாக கொண்டவரும் பேராசிரியரும், மருத்துவ பத்திரிகையாளருமான அதுல் கவாண்டே  பைடனின் கொரோனா கட்டுப்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே குழுவின் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கவாழ் மருத்துவர் செலின் கவுண்டர் கொரோனா கட்டுப்பாட்டு குழு  உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

இதே குழுவில் கர்நாடக மாநிலத்தை  பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி பைடன் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்குவங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவரும்  கொல்கத்தாவில் இருந்தவருமான அருண் மஜூம்தா அமெரிக்காவின் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐஐடி மும்பையில் பட்டம் பெற்றவராவார்.

டெல்லியில் மருத்துவம் படித்த ராகுல் குப்தா அமெரிக்க தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேபோல் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான கிரண் அகுஜா பைடன் ஆட்சியின் பணியாளர் மேலாண்மை அலுவலக குழு தலைவராக பொறுப்பேற்கிறார்.

அதேபோல் ஒபாமா நிர்வாகத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அரசியல், நிர்வாக, ராணுவ ஆலோசகராக இருந்த புனித் தல்வார் தற்போது வெளியுறவுத்துறை உயர்மட்டக் குழுவில்  இடம் பெறுகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவுநீத் சிங் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவியல் தொழில்நுட்ப அலுவலக குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வழக்கறிஞருமாக உள்ள சீமா நந்தா, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க தொழிலாளர் துறை குழுவில் முக்கிய  பொறுப்பை ஏற்கிறார்.

வெள்ளை மாளிகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பாவ்யா லால் பைடனின் நிர்வாகத்தில் மதிப்பு மிக்க நாசாவுக்கான ஆலோசனை குழுவில் இடம் பெறுகிறார்.

அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அருண் வெங்கட்ராமன் வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதித்துவ அலுவலக  நிர்வாகி ஆகிறார்.  

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியரான அத்மான் திரிவேதி வணிகவியல் துறையில் உயர் மட்டக் குழுவில் இடம் பெறுகிறார்

ஒபாமா நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையில் ஐடி பிரிவு தலைவராக  பணியாற்றிய அனிஷ் சோப்ரா பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க தபால் துறை சேவை குழுவில் முக்கிய பொறுப்புயேற்கிறார்.

அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்த சிதால் ஷா கல்வித்துறை உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ரமேஷ் பைடன் நிர்வாகத்தில் எரிசக்தி துறை உயர் மட்டக் குழுவில் இடம் பெறுகிறார்

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு  நிதியத்தில் மூத்த மேலாளராக பதவி வகித்த ரமா சகாரியா எரிசக்தி துறை உயர்மட்டக் குழுவில் முக்கிய பொறுப்பு ஏற்கிறார்.

இந்திய வம்சாவளியினரான ராஜ்டே  நிதித்துறை உயர்மட்டக் குழுவில் இடம்பெறுகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான தில்பிரீத் சித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் நிர்வாகக் குழுவில் இடம்பெறுகிறார். 

அமெரிக்க பள்ளிகள் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கல் ஊக்குவிக்கும் கொள்கை குழு இயக்குனராக இருந்த குமார் சந்திரன் அமெரிக்க விவசாயத் துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளி பெண்ணான மாலா அதிகா பைடன் மனைவிக்கான கொள்கை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் துணை அதிபர் கமலா ஹாரிசனுக்கு துணைச் செயலாளராக அமெரிக்க இந்தியரான சப்ரினா சிங்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கஷ்மீரில் பிறந்த  ஆயிஷா ஷா வெள்ளை மாளிகை அலுவலகத்தில் டிஜிட்டல் உத்திகள் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய சுமோனா குஹா தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையில் தெற்காசிய பிரிவு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவு இயக்குனராக தருண் சாப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்திய வம்சாவளிப் பெண்ணான சாந்தி காலதில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினய் ரெட்டி ஜோ பைடனின் உரையை எழுதும் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பரத் ராமமூர்த்தி அமெரிக்காவின் நிதி சீர்திருத்தம் நுகர்வோர் பாதுகாப்புக்கான தேசிய  பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த கௌதம் ராகவன் அதிபரின் பணியாளர் அலுவலகத்தில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளிப் பெண்ணான வனிதா குப்தா வெள்ளை மாளிகையின் அட்டர்னி ஜெனரல் பொறுப்பை ஏற்கிறார். 

எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிபுணரான இந்திய வம்சாவளிப் பெண்ணான சோனியா அகர்வால் காலநிலை கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய வம்சாவளிப் பெண்ணான காஷ்மீரைச் சேர்ந்த சமீரா பார்சிலி வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டாக நியமனம் செய்துள்ளனர். அட்லாண்டாவில் கடல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய சமீரா ஒபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!