அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்

By karthikeyan VFirst Published Jan 20, 2021, 11:27 PM IST
Highlights

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்; துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நடந்ததால், வாஷிங்டன் டிசி முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்புப்படை வீரர்கள் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, முழு பாதுகாப்புடன், பதவியேற்பு விழாவிற்கு வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு விழா நடத்தப்பட்டது.

பொதுவாக புதிதாக பதவியேற்கும் அதிபரை, முன்வாசல் வழியாக பழைய அதிபர் வரவேற்பார். ஆனால் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
 

click me!