அமெரிக்க அதிபருக்கு கைலாசா அதிபர் வாழ்த்துச் செய்தி... இறுக்கமான இந்துப்பற்று..!

By Thiraviaraj RMFirst Published Jan 21, 2021, 4:22 PM IST
Highlights

அமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கு கைலாசா அதிபரும், சாமியாருமான  நித்தியானந்தா வாழ்த்து செய்தி அனுப்பி வைத்துள்ளார். 

அமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கு கைலாசா அதிபரும், சாமியாருமான  நித்தியானந்தா வாழ்த்து செய்தி அனுப்பி வைத்துள்ளார்.

 

அந்த  வாழ்த்து செய்தி வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், அவர் கைலாசா என்ற தனி தீவு நாட்டை உருவாக்கி, பல்கலைக்கழகம், நாணயம், பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார் நித்யானந்தா.

அதில் “புராதனமான இந்து மதத்தை கொண்ட ஸ்ரீகைலாசா நாட்டின் சார்பாகவும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டுள்ள 2 பில்லியன் மக்களின் சார்பாகாவும் புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் அமெரிக்கா மீண்டும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், உலக அமைதியை உண்டாக்கவும் வேண்டும்” என கூறியுள்ளார்.
 

click me!