இந்தியா ரஷ்யா உச்சி மாநாடு ரத்திற்கு காரணம் குவாட் அல்ல.. கொரோனாதான்.. ரஷ்யா வெளியுறவுத்துறை விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2021, 5:43 PM IST
Highlights

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மாறி மாறி இதுவரை 20 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19வது உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு வருகை தந்தார் புடின். 

இந்தியா குவாட்ஸ் நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியதே, இந்தியா-ரஷ்யா இடையே நடைபெறவிருந்த மாநாடு ரத்துக்கு காரணம் என இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை ரஷ்ய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. ஒரு தலைப்பு செய்தியை பதிவிடுவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை விசாரித்து அதை வெளியிட வேண்டும் என தி பிரிண்ட் நாளிதழுக்கு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள பதிவில் இந்திய ரஷ்ய உச்சி மாநாடு ரத்துக்கு காரணம் கோரோனோ வைரஸ் தான் குவாட் அல்ல என கூறப்பட்டுள்ளது. 

அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெற இருந்த வருடாந்திர உச்சி மாநாடு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா,அமெரிக்கா, ஜப்பான் ஆகிய குவாட் நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியதால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்தியா-ரஷ்யா முதல் உச்சி மாநாட் கடந்த 2000 மாவது ஆண்டு  நடைபெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கியமான ஆலோசனைகள் இந்த மாநாட்டின் போது தான் மேற்கொள்ளப்படும். 

ஆனால் கடந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு நடைபெறவில்லை, ரத்தானது. இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு நீண்ட நெடுங்காலமாக பலமாக இருந்த போதிலும், கடந்த 2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவை கூட்டாளி நாடு என்கின்ற நிலையில் இருந்து தனிச்சிறப்பு கூட்டாளி என்கிற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் கடந்த வருடம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உச்சிமாநாடு நடை பெறாமல் போனதற்கு காரணம் தற்போதைய மத்திய அரசு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகளுடன் அதிகமாக உறவுபாராட்டுவதுதான் என தகவல்கள் வெளியாகின.  

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மாறி மாறி இதுவரை 20 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19வது உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு வருகை தந்தார் புடின்.  உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமாதானம் செய்வதற்கு ரஷ்யா முயற்சித்தது. கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யா இந்தியா சீனா இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் இடையே சந்திப்பு நடத்த ரஷ்யா ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்திய நாளிதழ்களில் உச்சி மாநாடு ரத்துக்கு காரணம் குவாட்தான் என  செய்தி வெளியிட்டு வந்தன. இந்நிலையில் இதை முற்றிலுமாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்,  பரபரப்பை உருவாக்க செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதில் உண்மை தன்மை என்னவென்று ஆராய வேண்டும். இதை இனி வரும் காலங்களில் இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் செய்வார்கள் என நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலே  குடாஷோவ் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில், இந்தியா-ரஷ்யாவுக்கு இடையேயான உறவு பலமாக உள்ளதாக கூறியுள்ளார். கோவிட் தொற்று எதிரொலியாக உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இது நம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவை வலுப்படுத்துவதற்கு ஒருபோதும் தடையாக இருக்காது எனக் கூறியுள்ளார். 

 

பல நாடுகளுடன் தொடர்பு வலுப்படுத்துவதுடன், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் கூட்டு நாடுகளின் உறுதிப்பாட்டை ரஷ்யா வரவேற்கிறது எனக் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும்  இடையேயான உறவைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது பொறுப்பற்ற செயல் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!