தேசிய கிளர்ச்சி படையின் கோரிக்கை ஏற்பு.. பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றிய தலிபான்கள்..!

By Thiraviaraj RM  |  First Published Sep 6, 2021, 11:27 AM IST

பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தலிபான்கள் வசமானது. பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்றப்பட்டது.


ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் மாகாணத்தை முழுவதுமாக கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட 33 மாகாணங்களை கைப்பற்றி 20 நாடுகள் கடந்துவிட்ட நிலையில், அவர்களால் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அங்குள்ள தாலிபான் எதிர்ப்பு படையினர் பெரும் சவாலாக இருந்தனர்.மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினர்.

Tap to resize

Latest Videos

தங்கள் பகுதியை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும், தாலிபான்கள் அத்துமீற கூடாது. கூடுதல் அதிகாரத்துடன் எங்கள் பகுதியில் சிறப்பு ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தேசிய கிளர்ச்சி படை தாலிபான்களுக்கு கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. இதனை ஏற்றுக் கொண்ட தாலிபான்கள், பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்றினர்.

 

இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தலிபான்கள் வசமானது. பஞ்ச்ஷீர் தலைநகரில் தலிபான் அமைப்பின் கொடியும் ஏற்றப்பட்டது.

click me!