காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுப்போம்.. அதுக்கு எங்களுக்கு உரிமை இருக்கு.. தலிபான்கள் நீலிக்கண்ணீர்.!

By Asianet TamilFirst Published Sep 3, 2021, 9:23 PM IST
Highlights

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் குறித்து பேச தங்களுக்கு உரிமை உள்ளது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. 
 

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அங்கு ஆட்சி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று சில நாட்களுக்கு தலிபான்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு தலிபான்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த வாழ்த்து செய்தியில், ‘காஷ்மீர் மாதிரியான பகுதிகளின் விடுதலைக்காக ஒன்றிணைவோம்’ என தலிபான்களுக்கு அல்கய்தா அழைப்பு விடுத்திருந்தது. 
இதற்கிடையே உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஆதரவாக பேசுவது தங்களுடைய உரிமை என்றும் அதில் காஷ்மீரும் அடங்கும் என்றும் தலிபான்கள் திடீரென தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “இஸ்லாமியர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்த மக்கள்தான். உங்களுடைய குடிமக்கள்தான். உங்கள் நாட்டு சட்டப்படி அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. இதற்கு நாங்கள் நிச்சயம் குரல் கொடுப்போம். அதே நேரத்தில் எந்த நாட்டுடனும் ஆயுதம் ஏந்தி போர் தொடுக்கும் கொள்கை தங்களுக்கு இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!