அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலூசி மீது அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கினார். இந்த தாக்குதலில் அவரின் மண்டை ஓடு பிளந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலூசி மீது அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கினார். இந்த தாக்குதலில் அவரின் மண்டை ஓடு பிளந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான பெலோசி, சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்குச் சென்றார். இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. நான்சி பெலோசியை வரவேற்ற தைவானையும் மிரட்டும் நோக்கில் தைவான் வான்வெளியில் சீன ராணுவம் போர் பயிற்சி எடுத்தது, சீன கப்பற்படையும் பயிற்சி எடுத்தது.
பிரதமர் மோடி - ரிஷி சுனக் முதல் சந்திப்பு ரெடி! இந்தோனேசியாவில் பக்காவாக பிளான் - எதற்கு தெரியுமா ?
சபாநாயகர் நான்சி பெலோசியின் இல்லம் சான் பிரான்சிஸ்கோ நகரில்உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி இருந்தார். அப்போது பாதுகாவலர்கள் கண்களில் மண்ணைத் தூவி அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைந்தார்.
நான்சி பெலோசி எங்கே? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த அந்த நபர், நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது திடீரென்று அந்த நபர் தான் வைத்திருந்த சுத்தியலால் பால் பெலோசியைத் தாக்க முயன்றார்.
என்னாச்சு எலான் மஸ்க் ! சமையலறை சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் வந்த வீடியோவால் பரபரப்பு
அந்த நபரை பால் பெலோசி தடுக்க முயன்றும் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதில் பால் பெலோசியின் தலையில் காயம் ஏற்பட்டு மண்டை ஓடு உடைந்தது, கை கால்களிலும் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, பால் பெலோசி வீட்டிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் ஆபத்தான நிலையில் இருந்த பால் பெலோசி தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார், விரைவில் குணமடைவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நான்சி பெலோசி வெளியிட்டஅறிக்கையில் “ கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவு அளித்த ஆதரவாளர்களுக்கு நன்றி. என் கணவருக்கு தலையில் அறுவை சிகிச்சையும், கை, கால்களில் பலத்தகாயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர் விரைவில் குணமடைவார்”எனத் தெரிவித்தார்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்டஅறிக்கையில் “ பால் பெலோசி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நான்சி பெலோசியை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினேன். விரைவில் பால் பொலோசி குணமடைவார் என எதிர்பார்க்கிறேன். இது போன்ற தாக்குதல்களை கடுமையாகக் கண்டிக்கிறேன், குடும்பத்தினரின் அந்தரங்கத்தை தனிமனிதர்கள் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
அமெரிக்க அதிபருக்கு அடுத்தார்போல் அதிகாரம் மிக்கவர் சபாநாயகர் பெலோசி. ஆனால் அவரின் வீட்டுக்குள் ஒருவர் பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்று அவரின் கணவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.