Refresh Pod | சிங்கப்பூர் விமானநிலையத்தில் கொளுத்தும் வெயில்! - ஊழியர்கள் இளைப்பாற புது வசதி!

By Dinesh TG  |  First Published Jun 29, 2023, 5:49 PM IST

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலுருந்து தன் ஊழியர்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய குழுமம் சில புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 


வரலாறு காணத வெயிலிம் தாக்கத்தால் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமானநிலைய குழுமம், தன் ஊழியர்களை குளிர்விப்பதற்காக பல்வேறு புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரு ‘புத்துணர்ச்சிக் கூண்டுகள்’ சோதனை முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கூண்டினுள் ஒவ்வொரு முறையும் ஒரு பட்டனை அழுத்தும்போது மூன்றரை நிமிடங்களுக்கு குளிர்ந்த காற்று வீசும். புறஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகளைக் கொல்லும் ஒரு செயல்முறையின் மூலம் குளிர் காற்று தூய்மையாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கூண்டும் 7 அடி உயரம் கொண்டது. அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்று ஒரே நேரத்தில் சுமார் ஐந்து ஊழியர்களைக் குளிர்விப்பதோடு, நாள் முழுவதும் இயங்கும் வகையில் செயல்படுகிறது. இந்த புத்துணர்ச்சிக் கூண்டினால் சுமார் 30,000 விமான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானநிலைய ஓடுபாதை உள்ளிட்ட வெளிப்புறங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் வேலை நேரம் முழுவதும் இந்த குளிரூட்டப்பட்ட கட்டடத்தை எளிதாக அணுக முடியாது. இதனால், சாங்கி விமான நிலையம் பல ஆண்டுகளாக வெளிப்புற பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் புத்துணர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இருப்பினும், சிங்கப்பூரில் வெப்பநிலை 40 டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளதால், விமான ஓடுபாதையில் வேலை செய்பவர்களைக் கவனித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என சாங்கி விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநர் இயோ கியா தை கூறியுள்ளார்.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

வெளியில் காலங்களில் வெளிப்புறங்களில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு குளிர்பானங்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இது கோடைக் காலமான மே, ஜூன், மாதங்களுக்கு இடையில் வழக்கமாக இடம்பெறும் நடிவடிக்கைதான் என்றாலும், இந்த ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்துணர்ச்சிக் கூண்டு குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரி இர்மான் ஹமீது கூறுகையில், கடந்த வாரம் சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பொது தொலைபேசி சாவடி போன்ற இயந்திரத்தை கண்டதாகவும், அதில் இருந்த ஒரு பட்டணை அழுத்தியவுடன் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது என்றார். வெயிலுக்கு அது மிகவும் இதமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tap to resize

Latest Videos

உலகின் மிக விலையுயர்ந்த நகரம்: முன்னேறும் சிங்கப்பூர் - என்ன காரணம்?

click me!