நாட்டு மக்களுக்காக தன் திருமணத்தையே நிறுத்தி வைத்த பிரதமர்.. மக்கள்தான் முக்கியம்.. உருகவைத்த ஜெசிந்தா ஆர்டன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 1:03 PM IST
Highlights

தடுப்பூசி போட்ட 100 பேருக்கு மேல் நியூசிலாந்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள முடியாது, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சனிக்கிழமை ஊர் ஊராக திருமணத்திற்காக சென்று 9 பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் வந்துள்ளது. இந்த நேரத்தில் கடுமையான ஊரடங்கு அவசியம் தேவைப்படுகிறது. 

கொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை 2வது முறையாக ஒத்திவைத்துள்ளார். வைரஸ் பரவும் நிலையில் மக்களுடன்  தான் இருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த முடிவு நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்ற பெயர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸ் பல அரசாங்கங்களின் ஆணிவேரை அசைத்துப் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். கொள்ளை நோய்கள் என்பது மனித சமூகத்திற்கு புதிதான ஒன்று அல்ல, எபோலா சார்ஸ் என பல நோய்களை மனித சமுகம் கண்டுள்ளது. ஆனால் அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலத்திலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக விஞ்ஞானிகள் திண்டாடி வருகின்றனர் என்பதுதான் வியப்பு. இதேபோல இந்த வைரஸை முறையாக கட்டுப்படுத்த முடியாமல் பல நாட்டுத் தலைவர்கள் தடுமாறிக் கொண்டு இருந்தாலும் சில தலைவர்களின் செயல் திறன்களும், சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் தலைவர்களின் நாடுகளில் கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ஜெர்மனியின்  ஏஞ்சலினா மார்க்கல்,  டென்மார்க்கின் மேத்தி பிரடிக்சன் தைவான் ஜனாதிபதி tsai ing wen , தடுப்பூசி இல்லாத காலத்திலும் முறையான ஊரடங்கை பின்பற்றியே உலகமே திரும்பி பார்க்கும் வகையில் கொரோனாவின் கொட்டத்தை முழுமையாக அடக்கிய ஆட்சியாளர்கள்தான் இவர்கள். இவர்கள் ஆனைவரை காட்டிலும் வேகமாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு எழுந்த நாடுதான் நியூசிலாந்து, அதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளே முழு காரணமாகும். கொரோனா வைரசை எங்களது நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என கடந்த  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெருமையுடன் அறிவித்தார் ஜெசிந்தா.எப்படி அந்த நாட்டில் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உலகமே வியந்து பார்த்த நிலையில் ஜெசிந்தா ஆர்டனின் புகழ் ஐநா மன்றம் வரை உயர்ந்த்து.

யார் இந்த ஜெசிந்தா... 

' ஜெசிந்தா கேட்  லூரல் ஆர்டன் '  என்பதுதான் ஜெசிந்தா ஆர்டனின் முழு பெயர். இவர் 1980ஆம் ஆண்டு பிறந்தார், நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர், 2017ம் ஆண்டில் இருந்து லேபர் கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவரது தந்தை லூரன் ஆர்டர் ஒரு போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார், தாய் லாரன் ஆர்டன் ஒரு பள்ளியில் உணவக உதவியாளராக பணிபுரிந்தார். ஆர்டன் கல்லூரியில் பயின்றார் அங்கு மாணவர் தலைவியாக இருந்தார். பள்ளியில் படிக்கும்போதே ஒரு உள்ளூர் கடையில் வேலை செய்தார், பின்னர் அவர் ' வைக்காடூ பல்கலைக்கழகத்தில்'  பயின்று 2001இல் அரசியல் மற்றும் மக்கள் தொடர்பியல் இளங்கலை தொடர்பு ஆய்வுகள் பட்டம் பெற்றார். ஆர்டன் அரசியலுக்குள் நுழைய காரணம் அவரது அத்தை மேரி ஆர்டன்தான் காரணம். அவர் லேபர் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

1999 ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில்  அவரின் அத்தையின் பிரச்சாரத்திற்கு உதவியாளராக பணியாற்றினார். அங்கிருந்துதான் ஆர்டனின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. தனது 17-வது வயதில் லேபர் கட்சியில் இணைந்து பிற்காலத்தில் அக்கட்சியின் இளைஞரணியில் முக்கிய பங்கு வகித்தார். பல்கலைக்கழக பட்டம் நிறைவு செய்தவுடன் கட்சியில் முழு நேர ஊழியராக செயல்பட்டார் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நியூயார்க் நகரில் ஒரு சூப் சமையல் அறையில் தன்னார்வலராக தொண்டு செய்தது மட்டுமின்றி தொழிலாளர் உரிமை பிரச்சாரத்தில் பணியாற்றினார். ஆர்டன் லண்டனுக்கு குடிபெயர்ந்த பிறகு அப்போதைய பிரதமர் டோனி பிளேயரின் 80 பேர்கொண்ட கொள்கைப் பிரிவு குழுவுக்கு மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு முன் பகுதியில் சர்வதேச சோசியலிஸ்டின் இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக ஆர்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008 தேர்தலுக்கு முன்பு லேபர் கட்சி பட்டியலில் ஆர்டன் 20-வது இடத்தை பிடித்தார், ஏற்கனவே எம்பியாக இல்லாத ஒருவருக்கு 20வது இடம் கிடைத்திருந்தது மிக உயர்ந்த அங்கீகாரமாக கருதப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் அவருக்கு ஒரு இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஆர்டன் பிரச்சாரத்திற்காக லண்டனிலிருந்து நியூசிலாந்திற்கு திரும்பினார். பின்னர் லேபர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், அப்போது வாக்கெடுப்பில் ஆர்டன் தோல்வியுற்றார், ஆனால் லேபர் கட்சியின் பட்டியலில் அவர் உயர்ந்த இடத்தை பிடித்ததால் பாராளுமன்றத்தில் ஒரு எம்பியாக நுழைய வாய்ப்பு கிடைத்தது. தேர்தலுக்கு பிறகு அவர் எம்பி ஆனார், 2011 பொதுத் தேர்தலுக்கு போட்டியிட்ட அவர், 217 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் லேபர் கட்சியின் பட்டியலில் 13வது இடத்தை பிடித்ததால் மீண்டும் அவர் பாராளுமன்றத்திற்கு திரும்பினார். 

பின்னர் 2014இல் ஆக்லாந்தில் அதில் அவர் போட்டியிட்டார். அதிலும் தோல்வி அடைந்த அவர் மீண்டும் லேபர் கட்சியில்5  இடத்திற்கு உயர்ந்து பாராளுமன்றத்திற்கு சென்றார். 2012ல் நடந்த இடைத் தேர்தல் ஒன்றில் ஆர்டன் போட்டியிட்டார் அதில் வெற்றியும் பெற்றார். 2017ல் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார், 2017இல் லேபர் கட்சியின் துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் அக்கட்சியின் தலைவராகவும் உயர்ந்தார், 36 வயதிலேயே ஒரு நபர் கட்சியின் தலைவரானது ஆர்டர் மட்டுமே. அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு மற்றும் கட்சிக்காக ஏராளமான நன்கொடைகள் வரத் தொடங்கியது. அதே ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி அமைத்து அவர் பிரதமரானார். நியுசிலாந்தில் மூன்றாவது பெண் பிரதமராக அவர் பதவியேற்றார். அவர் சர்வதேச அளவில் எடுத்த கொள்கை முடிவுகள் அவரை உலகத் தலைவராக உயர்த்தியது.

2018 ஜனவரி 19 அன்று ஜூன் மாதத்தில் தனக்கு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். பதவியில் இருக்கும்போதே கர்ப்பிணி பெண்ணாக தனது அலுவலக பணிகளை மேற்கொண்ட நியூசிலாந்து பிரதமராகவும் அறியப்பட்டார். பின்னர் 2021 ஜூன்  18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஜெசிந்தா மற்றும் அவரது வருகால கணவருக்கும் இப்போது 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையில்  பெயர் Neev Te Aroha Arden Gayford. ஜசிந்தாவும் கனவர் கேஃபோர்டும் பெண் குழந்தையின் பெயரையும் பொருளையும் குழந்தை பிறந்த போதே  சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர் . அதாவது - 'நிவ்' என்றால் ஒளி அல்லது பனி மற்றும் 'தே அரோஹா' என்றால் காதல். அது ஒரு மலையின் பெயர். அப்படிப்பட்ட ஊரில்தான் என் குழந்தைப் பருவம் கடந்துவிட்டது. அந்தப் பெண்ணின் செல்லப் பெயர் நீவ் கேஃபோர்ட் ஆகும்.

பதவியில் இருக்கும்போதே தாயான உலகின் இரண்டாவது பெண்மணி ஜெசிந்தா. முதல் பெண்மணி பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ ஆவார், அவர் 1990 இல் பதவியில் இருந்தபோது தாயானார் அப்போது அவருடைய வயதும் 37. இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கேஃபோர்டை முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த 2 ஆண்டுகளுக்க முன்பே ஜெசிந்தா அறிவித்திருந்தார்.  ஆனால் அதற்கிடையில் கொரோனா பரவத்தொடங்கியது. அதனால் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 வது முறையாக திருமண தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெசிந்தா மீண்டும் தனது திருமணத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். அதில் கூறியுள்ள அவர், நான் தற்போது திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் கட்டுப்பாடுகள் அவசியம். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

தடுப்பூசி போட்ட 100 பேருக்கு மேல் நியூசிலாந்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ள முடியாது, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சனிக்கிழமை ஊர் ஊராக திருமணத்திற்காக சென்று 9 பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் வந்துள்ளது. இந்த நேரத்தில் கடுமையான ஊரடங்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் எனது திருமணத்தையும் நான் ஒத்தி வைக்கிறேன், நான் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவள் அல்ல, தொற்றுநோயால் நமது நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் வலிகளையும், வேதனைகளையும் என்னால் உணர முடிகிறது. இந்நேரத்தில் நான் மக்களுடன் இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். கடந்த இரண்டாயிரத்து 2017ல் நியூஸிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார். இதுவரை கொரோனா பரவல் காரணமாக அவர் இரண்டு முறை தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்த தேதி எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!