உலகின் மிக வயதான நபர் 127 வயதில் காலமானார்.. 2 உலகப்போர்கள், 3 பெருந்தொற்று நோய்களை பார்த்தவர்!

By Ramya s  |  First Published Aug 1, 2023, 3:13 PM IST

உலகின் வயதான மனிதர்' எனக் கருதப்படும் பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127வது வயதில் காலமானார்.


உலகின் மிக வயதான மனிதர் என்று கூறப்படும் பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127வது வயதில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோஸ் பாலினார் வரும் 4-ம் தேதி தனது 128வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக ஜோஸ் பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவின் கொரேகோ டோஸ் ஃபில்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 4, 1895 இல் பிறந்த ஜோஸ் பாலினா, முதல் மற்றும் 2-ம் உலகப் போர் மற்றும் மூன்று பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். வில்லியன் ஜோஸ் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்ற அதிகாரி, ஜோஸ் பாலினாவின் வயது துல்லியமானது என்றும், அவர் 1900 க்கு முன் பிறந்தவர் என்றும் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

ஜோஸ் பாலினாவின் பேத்தி, எலியன் ஃபெரீரா, பிரேசில் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, 98 வயதான ஒரு பெண் இருப்பதாகவும், தான் சிறுவனாக இருந்தபோது அவரை அறிந்திருப்பதாகவும் கூறினார். அப்போதுதான் அவருடைய வயதை உறுதிப்படுத்திக் கொள்ள நாங்கள் ஆர்வமாக இருந்தோம், மேலும் எது சரியானது என்பதைக் கண்டறிய பதிவு அலுவலகத்தைப் பார்த்தோம். அவருக்கு நிச்சயமாக 100 வயதுக்கு மேல் ஆகிறது. 110 வயதாவது இருக்கும். இறப்புச் சான்றிதழில் அது எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.

எனினும் ஜோஸ் பாலினாவின் ஆவணங்களை உலக சாதனைகளுக்கான கின்னஸ் அமைப்பு ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மரியா பிரன்யாஸ் மோரேரா உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

ஜோஸ் பாலினா ஒரு எளிய மற்றும் அடக்கமான மனிதர் என்றும் தொழில்மயமான எதையும் விரும்புவதில்லை என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் கிராமப்புறங்களில் இருந்து பொருட்களை விரும்பினார் என்றும் தனது சொந்த கோழிகள் மற்றும் பன்றிகளை வளர்த்தார். ஜோஸ் பாலினா தனது 7 பிள்ளைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியராக இருந்து விவசாயியாக மாறிய நபர்.. சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரராக மாறியது எப்படி?

click me!