
சிங்கப்பூரில் 2வது கணவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதால் 11 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிறுமியின் தாய்க்கு சிறை தண்டனை விதிக்க அரசு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தனது கணவரின் செயலை தடுக்காதால் அப்பெண்ணுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அச்சிறுமி மெதுவாக சாப்பிட்டதற்காக அந்த நபரை பல முறை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி, 4 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பெண்ணின் செயலற்ற தன்மையின் விளைவாகவே சிறுமி உயிரிழந்ததாகவும், அதனை அப்பெண் எளிதாகத் தடுத்திருக்கலாம் என்றும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தார். இதனால் அவருக்கு 8 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
இதை தொடர்ந்து அப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 29 வயதான பெண், ஒரே வீட்டில் ஒரு குழந்தையின் இறப்பை அனுமதித்ததற்காக தண்டனை பெற்ற முதல் நபர் ஆவார். மேலும் சிறுமியின் கழுத்து மற்றும் தலையில் ஒரு கோப்பை வெந்நீரை ஊற்றியதற்காகவும், குழந்தையின் முன்கையில் கடித்ததற்காகவும் இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளியைப் பொறுத்தவரை, அப்பெண்ணின் 2-வது கணவருக்கு 14 முதல் 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்பு அடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 28 வயதுடைய நபர், குற்றமற்ற கொலை மற்றும் ஐந்து தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றுள்ளார்.
இந்த தம்பதி கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அப்பெண்ணின் முதல் திருமணத்தில் சிறுமி தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் அப்பெண்ணின் 2-வது கணவர் அச்சிறுமியை அடித்து துன்புறுத்த தொடங்கி உள்ளார். இதனால் அச்சிறுமிக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த காயங்கள் வெளியே தெரிந்தால், தங்களுக்கு பிரச்சனை என்று கருதிய தம்பதி சிறுமி பள்ளிக்கு செல்வதை நிறுத்தினர்.
எனினும் சிறுமியின பள்ளியைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள், அந்த தம்பதியின் வீட்டுக்கு வந்த போது, அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி, சிறுமியின் தலையில் உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை வைத்து கடுமையாக தாக்கி உள்ளார்.
இதனால் அச்சிறுமியின் காதில் இருந்து இரத்தம் கசிந்தது, தலை வீங்கி இருந்தது, ஆனால் அவளது காயங்களுக்கு எப்படி கணக்கு வைப்பது என்று தெரியாததால், தம்பதியினர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
நவம்பர் 10 ஆம் தேதி, அச்சிறுமியின் உடல் நிலை மோசமடைந்தால் அந்தப் பெண் தனது கணவருக்குப் போன் செய்து, தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில், சிறுமி ஸ்கேட்போர்டிங் செய்யும்போது படிக்கட்டில் இருந்து விழுந்துவிட்டதாக தம்பதியினர் பொய் சொன்னார்கள். பின்னர் அவர்கள் சிறுமியை தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.