துபாயில் நடைபெற்ற இந்தியா குளோபர் ஃபோரம் (IGF)-UAE உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
துபாயில் நடைபெற்ற இந்தியா குளோபர் ஃபோரம் (IGF)-UAE உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். உலக நாடுகளிடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், சகிப்புத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்க இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். மேலும், G20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, COP 28ஐ தலைமை ஏற்று நடத்தும் UAE, புவிசார் அரசியலை மாற்றுவது மற்றும் உலகளாவிய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் அவற்றின் தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற மிகப்பெரிய சவால்களை சமாளிக்க சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து குழு உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபரின் அரசு ஆலோசகர் அன்வர் முகமது ஆகியோர், இந்தியா குளோபர் ஃபோரம் (IGF)-UAE உச்சிமாநாட்டில் இருநாடுகளிக்கு இடையேயான நல்லுறவு, உலகளவில் மாறி வரும் போக்குகள் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்து ஒருவருக்கொருவர் விவாதித்தனர்.
காலநிலை மாற்றத்தை மையமாகக்கொண்ட, உலகளவில் எடுக்கப்படும் முன்முயற்சிகளுக்கு தேவையான நிதியளிப்பது வளர்ந்த நாடுகளின் பொறுப்பு, இருநாடுகளிலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, கூட்டு காலநிலை பராமரிப்பு நடவடிக்கை மற்றும் கூட்டு இருதரப்பு நல்லுறவுக்கான முன்னோக்கிய வழி ஆகியவை குறித்தும் கலந்துறையாடப்பட்டது.
சுற்றுச்சூழல் பராமறிப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 15 ஆண்டுகளாக பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்ட முதல் நாடு நாங்கள் என்றும், அதற்காக சூரிய ஒளியில் அதிக முதலீடு செய்துள்ளோம் என அன்வர் முகமது தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் தேசியவாதம் குறித்து பேசிய எஸ். ஜெய்சங்கர், இயற்கையான தொழில்நுட்பம் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் என்றும், தொழில்நுட்பத்தின் திறனகளின் அடிப்படையில் போட்டிகள் இருக்கும் என்றார். ஒருபுறம் உலகமயமாக்கல் நம்மை ஒத்துழைப்புடன் செயல்படவைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
India Global Forum UAE 2022: துபாயில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் துவக்கி வைப்பு!!
மேலும், உலகலாளவிய தொழில்நுட்ப தளங்கள், தேசிய தரவு சிக்கல்களுக்கு பதிலளிக்கும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் டேட்டா பாதுகாப்பு சிக்கல்களில் உலகெங்கிலும் உள்ள சர்ச்சைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொழில்நுட்பத்துறையில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து யுஏஇ அரசு அலோசகர் அன்வர் முகமது வலியுறுத்தினார். மேலும், அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்பத்தின் மையத்தன்மையை கருத்தில் கொண்டு, வணிகம் மற்றும் ஆளுகை ஆகிய இரண்டையும் செய்வதோடு அதைக் காரணியாக்குவது முக்கியம் என எஸ்.ஜெய்சங்கள் தெரிவித்தார்.
இந்தியா-யுஏஇ இரு நாடுகளுக்கும் இடையே 100 பில்லியன் அமெக்க டாலர் மதிப்புள்ள இரு தரப்பு வர்த்தகம் நடைபெறுவதே குறிக்கோள் என்றும், பிப்ரவரி 2022 முதல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஏற்கனவே 30% அதிகரித்துள்ளதாகவும் யுஏஇ அரசு ஆலோசகர் அன்வர் முகமது தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் கருத்தை தெரிவித்த எஸ் ஜெய்சங்கர், கோவிட் காலநிலை மற்றும் உலகளாவிய மோதல் போன்ற சிக்கல்களால் எதிர்கால உறுதியற்ற தன்மை குறித்து பேசினார். மேலும், இது போன்ற சவால்களுக்கு இந்தியா - யுஏஇ இருதரப்பு உறவு எவ்வளவு முக்கியமானது என்பதையும் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா குளோபல் ஃபோரம் UAE-யின் உலகளாவிய தாக்க நடவடிக்கைகள் குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.