இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய குளோபல் ஃபோரத்தின் இரண்டாவது ஐக்கிய அரபு அமீரக கூட்டத்தை துபாயில் துவக்கி வைத்தார்.
இந்த பிராந்தியத்தில் இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் எந்தளவிற்கு அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு நல்கி சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகின்றன என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய கருவாக பேசப்பட்டது.
இன்று உலகை பிரிக்கும் முக்கிய விஷயங்களை கீழ்கண்டவாறு பிரித்து தனது பேச்சை ஜெய்சங்கர் துவக்கினார்.
• உலகமயமாக்கல் மற்றும் உலகில் மீதான அதன் தாக்கம்
• மறுசீரமைப்பு மற்றும் வெவ்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் சாதக, பாதகங்களை மாற்றுதல்
• பல்வேறு நாடுகளுடன் அரசியல் அல்லது கட்சிகள் சார்ந்து கூட்டாண்மை அமைப்பது அல்லது அதில் இருந்து விலகிச் செல்லுதல் ஆகியவற்றை குறிப்பிட்டார்.
undefined
தொடர்ந்து தனது உரையில், "உலகமயமாக்கலை ஆழமாக பார்க்கும்போது, அதிக மறுசீரமைப்பு மற்றும் அதிக பன்முகத்தன்மை இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா உறவு என்பது இன்று, நேற்று உதித்தது அல்ல. பல நூற்றாண்டுகளாக "உள்ளுணர்வு" தன்மையுடன் ஆறுதல் கொண்டதாக நீடித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான இந்திய குடிமக்களைக் கொண்ட நாடாக, இந்தியாவிற்கு முக்கியமான கூட்டாண்மை நாடாக கருதப்படுகிறது.
ரோலக்ஸ் வாட்ச் வாங்க இவ்வளவு போராட்டமா? அடேங்கப்பா.! வேற லெவல் தகவலா இருக்கு !!
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், எங்களது உறவுகளில் வெளிப்படையான, உண்மையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டதுடன் விண்வெளி, கல்வி, சுகாதாரம் மற்றும் புதிய நிறுவனங்கள் போன்ற துறைகளிலும் இருநாடுகளும் ஒத்துழைப்பு நல்கி வருகிறோம். எனவே, பாரம்பரிய உறவுகள் தொடர்கின்றன. அதேசமயம் புதிய வரவுகளும் உள்ளன.
மற்ற சர்வதேச கூட்டு நாடுகளுடன் இந்தியா தனது உறவு வைத்துக் கொண்டாலும், வரும் ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான உறவு மறுவரையறை செய்யப்பட்டு மீண்டும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லப்படும். இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியா குளோபல் ஃபோரம் மூலம் உலக நாடுகளை இணைப்பதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது'' என்றார்.
நிலவில் இருந்து பூமிக்கு திரும்பியது ஓரியான் விண்கலம்... பாராசூட் உதவியுடன் கடலில் இறங்கியது!!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை இந்தியா குளோபல் ஃபோரம் 2022-ஐ துவக்கி வைத்தார். இது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முன்னணி அரசியல், வணிக மற்றும் கலாச்சார நாடுகளை ஒன்றிணைக்கும் ஐந்து நாள் நிகழ்வாகும்.
ஜி 20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் பெரிய சர்வதேச நிகழ்வு இதுவாகும். மேலும் இது துபாய் மற்றும் அபுதாபியில் டிசம்பர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது. ஜி20 தலைவர் பதவியை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.