உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறியுள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
undefined
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 21 ஆயிரத்து 905 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 19,87,696 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 35,47,14,665 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறிய கொரோனா தற்போது ஒமைக்ரான் வைரசாகவும் உருமாறி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150வது அமர்வு நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ், ‘கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது. நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம். கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது’ என்று பேசினார்.