உக்ரைன் எல்லையில் படைகளை குவிக்கும் ரஷ்யா - அமெரிக்கா..! உலகப்போர் மூளும் அபாயம் என்று உலக நாடுகள் பீதி..

By Raghupati RFirst Published Jan 25, 2022, 8:31 AM IST
Highlights

உக்ரைன் எல்லைப் பகுதியில் தங்களது நாட்டு ராணுவத்தை ரஷ்யாவும், அமெரிக்காவும்  குவித்து வருவதால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவுகிறது.

நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது.  

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகயை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது குறித்து பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் ட்ருஸ் கூறும் போது, ‘சீனாவும், ரஷ்யாவும் சர்வாதிகாரத்தை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நினைக்கின்றன. பெரிய தவறு செய்வதற்கு முன்னர் உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் நிச்சயம் வெளியேற வேண்டும். ரஷ்யா தனது வரலாற்றிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. 

ஆக்கிரமிப்பு ஒரு பயங்கரமான புதைகுழி . அது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.  இதையடுத்து அமெரிக்க அதிபர் பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார். அமெரிக்க படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையிலும், உக்ரைன் உள்ளேயும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது போக கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டுள்ளார். இதனால் உக்ரைனில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என இரு நாடுகளுடனும் உக்ரைன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ரஷ்யாவுடன் ஆழமான கலாசார உறவுகளைக் கொண்டுள்ள உக்ரைனில் ரஷ்ய மொழி பரவலாக பேசப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக உக்ரைன் எடுத்து வரும் நடவடிக்கைகள், குறிப்பாக நோட்டோவில் சேரக்கூடாது என ரஷ்யா வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

கடந்த 2014இல் சோவித் யூனியன் காலத்து உக்ரைனின் அதிபர் பதவியை நீக்குவதாக உக்ரைன் அறிவித்தது, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை மணியாக இருந்தது. அதன் பின்னரே உக்ரைனின் தெற்கு தீபகற்பமான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதேபோல உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிய பிரிவினைவாதிகளையும் அது ஆதரித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அங்கு நடைபெறும் சண்டையில் இதுவரை 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்ற மேற்குலக நாடுகள் நம்புகிறது. 

இதனால் தான் அவர்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னரும் கூட ரஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லையில் உள்ளன. இதனால் உக்ரைன் எல்லையில் மட்டுமின்றி மேற்கு ஐரோப்பா முழுவதுமே சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!