"முட்டா *** மாதிரி கேள்வி கேக்குறீங்க..!" லைவில் செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர்.. அதிர்ச்சி வீடியோ

Published : Jan 25, 2022, 10:37 AM ISTUpdated : Jan 25, 2022, 10:42 AM IST
"முட்டா *** மாதிரி கேள்வி கேக்குறீங்க..!" லைவில் செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர்.. அதிர்ச்சி வீடியோ

சுருக்கம்

பணவீக்கம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டியது சர்ச்சையாகியுள்ளது. அதிபர் திட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்தபோது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபா் ஜோ பைடனின் செல்வாக்கு 54% காணப்பட்டது, டிசம்பா் கடைசி வாரத்தில் அவரது செல்வாக்கு இதுவரை இல்லாத அளவு 41%-ஆக சரிந்தது.

 

மசோதாக்களை நிறைவேற்றுவது, அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஜோ பைடன் ஆட்சி தடுமாறுவது தான் அவரது செல்வாக்கு சரிவதற்கு காரணம் என கூறப்படுகிறது.அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.  அப்போது ஜோ பைடன் அவரை கெட்ட வார்த்தையில் திட்டினார். மைக் ஆனில் இருந்தபோதே ஜோ பைடன் திட்டியது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து ஜோபைடன் தரப்பு கூறுகையில், பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் ஜோ பைடன் பேசினார். பத்திரிகையாளரை அவர் தனிப்பட்ட முறையில் திட்டவில்லை. அதிபர் ஜோ பைடனே பத்திரிகையாளரை தொடர்புகொண்டு பேசிவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!