2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி துல்லியமாக அமைந்திருக்கும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மங்கச்செய்கிறது அல்லது மறைக்கிறது. இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. மே 5 அன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம் அதிகாலை 1.01 மணிக்கு முடிவடையும். ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இன்று நிகழ உள்ளது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
பெனும்பிரல் சந்திர கிரகணம் என்றால் என்ன?
பெனும்பிரல் சந்திர கிரகணம், சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புறப் பகுதிக்குள் செல்லும்போது நிகழ்கிறது, இது பெனும்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. இதனால் இது பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக சந்திரன் சிறிது சிறதாக மங்கிவிடும். இதனால் சந்திரன் வழக்கத்தை விட சற்று மங்கலாக தோன்றும்.
எனினும் இந்தியாவில் வானிலை தெளிவாக இருந்தால், 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தைக் காண இந்திய நகரங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பெனும்பிரல் சந்திர கிரகணம் 2023: நகர வாரியான நேரங்கள்