பர்கரில் எலியின் கழிவு... வாடிக்கையாளர் கடுப்பானதால் மெக்டொனால்ட்ஸ்-க்கு நேர்ந்த சிக்கல் என்ன தெரியுமா?

By Narendran S  |  First Published May 5, 2023, 12:06 AM IST

சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை வைத்துள்ளது. அதில் பர்கர் உள்ளிட்ட துரித உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வரும் மெக்டொனால்ட்ஸில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வாங்கிய சீஸ் பர்கரில் எலியின் கழிவு இருந்துள்ளது.

இதையும் படிங்க: தக்ஃபிர் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முயன்றது ஏன்?

Tap to resize

Latest Videos

இதை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண், இதுக்குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கியது தெரியவந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  9 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதா? வைரல் போட்டோ..

அதன்படி, சுகாதார விதிகளை மீறி செயல்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும். அத்துடன் பெண் சட்ட நடவடிக்கைக்கு மேற்கொண்ட செலவுத்தொகை ரூ.22.6 லட்சம் மற்றும் கூடுதல் தொகை ரூ.19,537 என மொத்தம் ரூ.5 கோடி அபராத தொகை வழங்க வேண்டும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!