Ukraine Russia War: அணு உலை வெடிக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உக்ரைன்.. தாக்குதலை நிறுத்துமா ரஷ்யா..?

Published : Mar 30, 2022, 07:13 PM IST
Ukraine Russia War: அணு உலை வெடிக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உக்ரைன்.. தாக்குதலை நிறுத்துமா ரஷ்யா..?

சுருக்கம்

ஐரோப்பியாவில் மிக பெரிய அணு உலையான செர்னோபில் அணு உலையில் உள்ள வேதி பொருட்கள் வெடிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் ரஷ்யா படைகள் உடனே தாக்குதல்களை நிறுத்தி வெளியேற வேண்டும் என உக்ரைன் துணை பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

உக்ரைன் ரஷ்யா போர்:

ஐரோப்பியாவில் மிக பெரிய அணு உலையான செர்னோபில் அணு உலையில் உள்ள வேதி பொருட்கள் வெடிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் ரஷ்யா படைகள் உடனே தாக்குதல்களை நிறுத்தி வெளியேற வேண்டும் என உக்ரைன் துணை பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.

ரஷ்யப்படை தாக்குதல்:

போர் தாக்குதலால் உக்ரைனின் பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன. மேலும் உக்ரைன் நாட்டின் பல்வேறு இராணுவ தளங்கள் ரஷ்ய படையினார் தொடர் தாக்குதலில் சிக்கி வருகிறது. பெரும்பாலும் ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன. போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

40 லட்சம் மக்கள் வெளியேற்றம்:

இதுவரை 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதம் தாண்டி தொடர்ந்து வரும் நிலையில், போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.  தலைநகர் கீவ்வை கைபற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைன் - ரஷ்யா இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மரியுபோல் தாக்குதல்:

குறிப்பாக துறைமுக நகரம் மரியுபோலில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கல், குடியிருப்பு உள்ளிட்ட இடங்களின் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் காரணமாக குழந்தைகள் உட்பட 5000 பேர் பலியாகி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், நேற்று துருக்கியில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், கீவிலிருந்து ரஷ்யா படைகளை குறைத்து கொள்வதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

செர்னோபில் அணு உலை:

இந்நிலையில் செர்னோபில் அணு உலையைச் சுற்றி ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபடுவதால் அணு உலையில் உள்ள வேதி பொருட்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரஷ்யா படைகள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரஷ்சுக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UAE Indians Alert: அமீரக வாழ் இந்தியர்களுக்கு முக்கிய செய்தி! பாஸ்போர்ட், விசா சேவைகளில் அதிரடி மாற்றம்
Free Train Travel for Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு 100% இலவச ரயில் பயணம் எங்கு தெரியுமா..?