இறுதிச் சுற்றுக் கேள்விகளின் போது, போர்சில்ட்டிடம் நீங்கள் ஒரு வருடம் வேறு ஒரு பெண்ணாக வாழ முடிந்தால் யாராக வாழ்வதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
72வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி எல் சால்வடாரில் நடந்து முடிந்துள்ளது. 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்ட தாய்லாந்தின் அன்டோனியா போர்சில்ட், நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மொராயா வில்சன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தாய்லாந்தின் அன்டோனியா போர்சில்ட் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது. நீங்கள் ஒரு வருடம் வேறு ஒரு பெண்ணாக வாழ முடிந்தால் யாராக வாழ்வதைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் கூறிய 27 வயதான தாய்லாந்து அழகி, "நான் மலாலா யூசுப்சாயை தேர்வு செய்வேன். அவர் இன்று இருக்கும் நிலைக்கு வருவதற்கு அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி எனக்குத் தெரியும்" என்று தெரிவித்தார்.
மேலும், "அவர் (மலாலா) பெண்களின் கல்விக்காகப் போராட வேண்டியிருந்தது. அனைத்துப் பெண்களும் வலுவாக நிற்பதற்காகவும், மாற்றத்துக்கான முன்மாதிரியாக இருக்கவும் போராட வேண்டியிருந்தது. நான் யாராகவாவது வாழ்வதைத் தேர்வு செய்யச் சொன்னால், அது அவராகவே இருக்கும்" என்றார்.
கையைச் சுடும் ஐபோன் 15! ஹீட்டிங் பிரச்சினையை சரிசெய்யப் போராடும் ஆப்பிள் நிறுவனம்!
FINAL Q&A starting with Thailand! pic.twitter.com/w71IH4kEvY
— Miss Universe (@MissUniverse)மற்ற இறுதிப் போட்டியாளர்களிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய ஆஸ்திரேலியாவின் வில்சன் தனது தாயாக வாழ விரும்புவதாக பதிலளித்தார், "அவர் மிகவும் வலிமையான பெண். உறுதியானவர். அவர்தான் கடினமாக உழைக்கக் கற்றுக்கொடுத்தார். எப்படி தைரியமாக இருக்க வேண்டும், எப்படி வலிமையாக இருக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தார்" என்று தெரிவித்தார்.
நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரிட்டிஷ் எழுத்தாளரும் தத்துவஞானியுமான மேரி வோல்ஸ்டோன்கிராஃப்டைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். "அவர் தான் பெண்களின் உரிமைகளுக்கான வாசலைத் திறந்த முதல் பெண்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பதிலுக்காக நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை தாய்லாந்தின் போர்சில்ட்டும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் வில்சனும் பெற்றனர். இந்தியா சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற 23 வயதான ஸ்வேதா ஷர்தா இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
1975-க்குப் பிறகு முதன்முறையாக மத்திய அமெரிக்க நாடு ஒன்று 2023ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Miss Universe 2023: பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடிய ஷெய்னிஸ் பலாசியோஸ்!