உடலை காட்டி பாடம் நடத்தும் தாறுமாறு ஆசிரியை...!! இஞ்ச் பை இஞ்சாக ரசிக்கும் மாணவர்கள்...!!

Published : Dec 24, 2019, 06:36 PM IST
உடலை காட்டி பாடம்  நடத்தும் தாறுமாறு  ஆசிரியை...!!  இஞ்ச் பை இஞ்சாக ரசிக்கும் மாணவர்கள்...!!

சுருக்கம்

உடற்கூறியல் வகுப்பில் உடலுறுப்புகளை மாணவர்களுக்கு காட்சி படுத்தும் வகையில் தம்முடைய  உடல்முழுவதும் உடல் பாகங்கள் கொண்ட ஆடையணிந்து வகுப்பு எடுத்துள்ளார்.  

உடற்கூறியல் வகுப்பில் தன் உடலை காட்டி ஆசிரியை மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வரும்  சம்பவம்  பரபரப்பையும் பாராட்டையும்  ஏற்படுத்தி உள்ளது . மாணவர்களுக்கு தான்  கற்பிக்கும் பாடம் எளிதில் புரிய  ஆசிரியை தன் உடலை காட்டி  பாடம் நடத்துவதால் மாணவர்கள் ஆர்வமுடன் படம் கற்று வருகின்றனர்.   மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடம் கற்பிக்க பெற்றோர்களை விட சில ஆசிரியர்கள்  அதிக மெனக்கெடுவது உண்டு .  ஒவ்வொரு மாணவருக்கு ஒவ்வொரு முறையில் சொன்னால்தான் பாடம்  புரியும் என்பதால்  பல வகைகளில் யோசித்து விதவிதமான முறையில் பல ஆசிரியர்கள் ஆடி பாடி  பாடம் நடத்துவதை பார்த்துள்ளோம். 

 

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிகா  டியூக் என்ற ஆசிரியை மாணவர்கள் எளிதாக பாடம் கற்றுக்கொள்ள உடலில் உள்ள உறுப்புகளை வெளியில் தெரிவது போன்ற  ஒரு முழு உடல்போன்ற  உடையை அணிந்து பாடம் சொல்லிக் கொடுப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .  சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றி வரும்  வெரோனிகா வரலாற்று வகுப்புகளுக்கான வரலாற்று ஆளுமைகளைப் போல் வேடமணிந்து வந்து பாடம் நடத்துவது போன்ற முயற்ச்சியில் ஈடுபட்டு வந்த அவர், அறிவியல் பாடத்தில் மனித உடற்கூறியலை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஒரு தனித்துவமான யோசனையை கண்டுபிடித்து  உடற்கூறியல் வகுப்பில் உடலுறுப்புகளை மாணவர்களுக்கு காட்சி படுத்தும் வகையில் தம்முடைய  உடல்முழுவதும் உடல் பாகங்கள் கொண்ட ஆடையணிந்து வகுப்பு எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் போது அவரது கணவர் அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஆசிரியரின் இந்த முயற்சிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .   ஆசிரியை இதுபோன்று பாடம் நடத்துவதால் மாணவர்கள் பாடத்தை  எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் கற்ற பாடத்தை எளிதில்  மறக்கமாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!