ஒரே ஒரு குபீர் சிரிப்பால் வந்த வினை... சீமானை சீமானந்தாவாக்கிய நித்தி சிஷ்யர்கள்..!

By Thiraviaraj RM  |  First Published Dec 24, 2019, 5:15 PM IST

கைலாசா நாட்டுக்கு சென்று குடியேறிவிடுவேன் என  எனச் சொல்லி விட்டு குபீரென சிரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நித்யானந்தாவின் சிஷ்யர்கள் சீமானின் புகைப்படங்களை மாற்றி அவரை சாமியாராக சித்தரிக்கும் வகையில் மீம்ஸ் போட்டு கதறடித்து வருகின்றனர்.


இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டால் இங்கிருந்து வெளியேறி நித்யானந்தா உருவாக்கியுள்ள கைலாசாவில் குடியேறி விடுவேன் என சொல்லி விட்டு குபீரென சிரித்தார் சீமான். இது நித்யானந்தா தரப்பிற்கு அத்திரத்தை ஏற்படுத்தியது. 

இதற்கு பதிலடி கொடுத்த நித்யானந்தா தரப்பு '’ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல. தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்’’எனக் கூறினர். இதற்கு சீமான் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, ‘மீனாட்சி மீனாட்சி இந்த சீமான் தம்பிக என்ன அசிங்கமா பேசுறாங்களே என்ன செய்ய? விடுப்பா உனக்கு தனி நாடு கைலாசம் இருக்கு சீமானுக்கு ஓரு கவுன்சிலர் கூட இல்ல. உனக்கு மூளை வளர்ச்சி இருக்கு நீ ஞானி. அவனுக்கு?’’என ட்விட்டரில் பதிலடி கொடுத்தார் நித்தி. 

Latest Videos

அடுத்து இன்னும் ஒருபடி மேலே போய் இப்போது சீமானின் புகைப்படங்களை சாமியாரைப்போல வடிவமைத்து அவற்றை சமூகவலைதளப் பக்கங்களில் நித்தியின் சீடர்கள் பரப்பி வருகின்றனர்.  

click me!