இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை..!

By Thiraviaraj RMFirst Published Dec 24, 2019, 3:36 PM IST
Highlights

இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய நாட்டுக்குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் எல்லை மாவட்டமான பூஞ்சை சேர்ந்த முகம்மது தாஜ் என்ற பாகிஸ்தான் பெண் கதீஜா பர்வீனை  திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கான இந்திய குடியுரிமையை மாவட்ட வளர்ச்சி ஆணையர் ராகுல் யாதவ் வழங்கினார். கதீஜா பர்வீன் பாகிஸ்தானில் பிறந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்துள்ளதால், 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டப்பிரிவு 5ன் படி இந்திய குடியுரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சான்றிதழை பூஞ்ச் மாவட்ட ஆட்சியர் இந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். கதீஜா பர்வீன் இதனால் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்தியதை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இந்திய குடியுரிமை வழங்கபட்டதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 

click me!