மெக்காவை இடித்து ராமர் கோயில், கெத்துகாட்டிய பாஜக ஆதரவாளர்...!! தூக்கி உள்ளே வைத்த சவுதி போலீஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 24, 2019, 1:26 PM IST
Highlights

ஹிந்து அன்பர்களே அடுத்த ராமர்கோவில் மெக்காவில் தான் அதற்கு அனைவரும் தயாராகுங்கள் ,  ஜெய்ஸ்ரீராம் மோடி நம்மோடு இருக்கிறார் என பதிவிட்டிருந்தார் .
 

அடுத்து  மெக்காவை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டுவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை சவுதி போலீசார் கைது செய்துள்ளனர் பிழைக்கச் சென்ற இடத்தில் மத உணர்வை காட்டிய நபர்  சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார் .  வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இருந்து வருகிறது இந்தியா இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது முதல்   சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர் என பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது . 

 

இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் கொண்டுவந்திருப்பதின் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என நாடு முழுவதும் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவருகிறது.  இந்த நிலையில் பாஜகவினர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . அதே நேரத்தில்  நீண்ட நெடிய வழக்காக நடந்துவந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கிடைத்து அங்கு  ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா தம்மம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வரும் கர்நாடக மாநிலம்  குந்தாப்பூரைச்  சேர்ந்த ஹரிஷ் பங்கோரா என்ற நபர் இஸ்லாமியர்களின் புனித தலமாக இருந்துவரும் மெக்காவை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார் .  அதில் ,  ஹிந்து அன்பர்களே அடுத்த ராமர்கோவில் மெக்காவில் தான் அதற்கு அனைவரும் தயாராகுங்கள் ,  ஜெய்ஸ்ரீராம் மோடி நம்மோடு இருக்கிறார் என பதிவிட்டிருந்தார் . 

அவரின் கருத்துக்கு  பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .  இந்நிலையில்  சவுதி தம்மம் பகுதி போலீசாருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டது ,  அதைச் தொடர்ந்து ஹரிஸ் பங்கோராவை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . அத்துடன்  அவரது வேலையும் பறிக்கப்பட்டு அவரது ஒப்பந்தமும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . பிழைக்கச் சென்ற இடத்தில் அதுவும்  ஒரு முஸ்லிம் நாட்டில் இருந்துகொண்டு மெக்காவை இழிவுபடுத்தி  பாஜக ஆதரவாளர் கைதாகியிருப்பது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!