அமித்ஷாவை மிரட்டிய பிரதமர்..!! உங்களைப் போல நாங்களும் முடிவெடுத்தால் என்ன நடக்கும் என கேள்வி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2019, 3:15 PM IST
Highlights

அதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும்தானே. என இந்தியாவிற்கு அவர் சூசகமாக வினவியுள்ளார் .

மதத்தின் பெயரால் குடியுரிமை சட்டத்தை இந்தியா கொண்டு வந்துள்ளது போல மலேசியாவும்  செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என மலேசிய பிரதமர் இந்தியாவிற்கு சூசகமாக கேள்வி  எழுப்பியுள்ளார் .  இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு  அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது .  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இது தொடர்பாக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

 

அசுர பலத்துடன் உள்ள பாஜக இச்சட்டத்தை எதேச்சதிகார போக்குடன் கொண்டு வந்து திணித்துள்ளது என  எதிர்க்கட்சியினர்  இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர் .  வட இந்தியா முழுவதும் போராட்டம் தீப்பற்றி எரிகிறது குறிப்பாக வட கிழக்கு மாகாணம்,  மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில்  போராட்டம் தீவிரமடைந்துள்ளது .  இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மதசார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. 

அதேபோன்றதொரு நடவடிக்கையை மலேசியாவில் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும்தானே. என இந்தியாவிற்கு அவர் சூசகமாக வினவியுள்ளார் . குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்படுவர் மலேசியாவிற்கு வந்த இந்தியர்களை நாம் மனமுவர்ந்து ஏற்றுக் கொண்டோம் அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம் அவர்கள் உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு குடியுரிமை வழங்கி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் . 

click me!