500 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து... 24 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Published : Dec 24, 2019, 12:10 PM IST
500 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து... 24 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து அப்பளம் நொறுங்கியது. 

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். 

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்து அப்பளம் நொறுங்கியது. 

இந்த விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 13 பேரை மீட்டு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, ராட்ச கிரைன் மூலம் பேருந்து மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!