ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தீவிரம் காட்டி வந்தார். ஆனால், அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆப்கானிஸ்தானில் ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 24 மணிநேரத்தில் 100 தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தீவிரம் காட்டி வந்தார். ஆனால், அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து, தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். மறுபுறம் தலிபான்களை களையெடுக்கும் முயற்சியாக, ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 15 மாகாணங்களில் 18 இடங்களில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், 109 தீவிரவாதிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 45 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்;- கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களா? அல்லது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களா? என்ற விவரத்தை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.