சீமான் செய்தது ராஜபக்சேவைவிட மோசமான வேலை...!! கிழித்தெடுத்த விடுதலை புலிகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2019, 12:04 PM IST
Highlights

அண்ணன் சீமான் அவர்களை சுவிஸ்க்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்புவிடுத்தார்கள், அந்த அழைப்பானது சுவிஸ் கிளை மூலம் அழைப்பு தரப்பட்டது, அங்கு பேசிய அவரது பேச்சுகள், கருத்துக்கள், கதைகள் பண்பாடற்ற சொற்கள் எங்களை பின்னுக்கு தள்ளியது. அவர் ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யலாம் ஆனால் ஈழமக்களுக்கு தலைவர் ஆக முடியாது, ஈழத்துக்கும், ஈழமக்களுக்கும் ஒரே தலைவர் நம்முடைய தேசிய தலைவர் ஒருவர் மட்டுமே. இனியொருவரும் இல்லை, ஈழமக்களுக்கு தலைவர் ஆகும்  நோக்கம் அண்ணன் சீமானுக்கு  இருந்தால் அதனை அவர் விட்டுவிட வேண்டும். 

ஈழ மக்களின் கட்டுமானத்தை உடைக்க நினைப்பது, இந்தியாவின் உளவு படை செய்வதற்கும் அண்ணன் சீமான் செய்வதற்கும் வித்தியாசம் இல்லை, என்று . தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டத்துறைப் பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம்  வேதனை தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளதன் சுருக்கம். 

அனைவரும் வணக்கம்... நான் இந்த காணொலியை பதிவு செய்வதற்கான காரணம் என்னவென்றால்,  நான் தமிழீலத்தில் பிரிவினைகளை பார்த்து வளர்ந்தவன். தமிழீலத்தில் விடுதலைப் புலிகளுக்கு பக்கத்தில் இருந்து நிறைய இயக்கங்கள் உண்டாகி அவர்கள் தப்பான வழியில் சென்று தமிழீல மக்களுக்கும், தமிழ் மக்களின் ஆசைக்கும் எதிராக வேலை செய்வதை நாங்கள் பார்க்கிறோம். 2009 பிறகு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டு அரசியலில் மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது, ஒருவருக்கொருவர் நாங்கள் தான் சரியான நிலையில் இருக்கிறோம் என்ற அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள். ஆனால் ஒற்றுமை தான் தமிழீலத்தின் வெற்றி.தமிழ் சமூகத்திற்கு உழைப்பவனாகிய என்னுடைய கருத்தை கேட்டீர்கள் என்றால் , " நாகரீகமாக " எழுத பழகவும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லி "இராசபக்சேவை" விட மோசமான பார்வை கொண்டோராக இருக்க வேண்டாம், உங்களுடைய கருத்துக்களை நாகரீகமாகவும் பண்பாகவும் எழுதுவது நல்லது, உங்களுக்குள் சண்டையிட்டு கொண்டால் சிங்களவர்கள் எங்களை தான் அடித்து துன்புருத்துவார்கள்.

மேலை நாடுகள் எங்களை தான் மட்டப்படுத்தும், இது தான் ஆங்கிலேயர்களின் வெற்றி, சாதி, மதம், குழுக்கள் என பிரித்து நம்மையெல்லாம் ஒன்றினையவிடாமல் தடுத்து அடிமைபடுத்தினார்கள், அது தான் இன்று தமிழகத்தில் நிலவி வருகிறது, அது இன்று ஆங்கிலேயர்களால் இல்லாம RAW என்ற  போர்வையாலும், அல்லது வெவ்வேறு போர்வையாலும் நடக்கலாம். யார் தமிழன் யார் தமிழன் என்பதை விட தமிழீல விடுதலைக்கு உழைத்தவர்கள் தமிழர்கள் மட்டும் தானா?, அதை மீறி தமிழ் மீதும் தமிழ் தேசியத்தின் மீது பற்று கொண்ட அனைவரும் உழைத்துள்ளார்கள்,
அதற்காக யார் தமிழன் , யார் தமிழன் இல்லை என்பதை கண்டறிய ஜீன்களையா தொட்டு பார்க்க முடியும்,அவ்வாறு இருக்க முடியாது, அத்தகைய செய்லகளை தேசிய தலைவரே விரும்பமாட்டார்... அண்ணன் சீமான் அவர்களை சுவிஸ்க்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்புவிடுத்தார்கள், அந்த அழைப்பானது சுவிஸ் கிளை மூலம் அழைப்பு தரப்பட்டது, அங்கு பேசிய அவரது பேச்சுகள், கருத்துக்கள், கதைகள் பண்பாடற்ற சொற்கள் எங்களை பின்னுக்கு தள்ளியது. அவர் ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்யலாம் ஆனால் ஈழமக்களுக்கு தலைவர் ஆக முடியாது, ஈழத்துக்கும், ஈழமக்களுக்கும் ஒரே தலைவர் நம்முடைய தேசிய தலைவர் ஒருவர் மட்டுமே. இனியொருவரும் இல்லை, ஈழமக்களுக்கு தலைவர் ஆகும்  நோக்கம் அண்ணன் சீமானுக்கு  இருந்தால் அதனை அவர் விட்டுவிட வேண்டும். 

ஈழ மக்களின் கட்டுமானத்தை உடைக்க நினைப்பது இந்தியாவின் உளவு படை செய்வதற்கும் அண்ணன் சீமான் செய்வதற்கும் வித்தியாசம் இல்லை, என்று கருதுகிறேன். நாம் தமிழர் கட்சியின் தலைவர், முக்கிய பொறுப்பாளர்கள்,தொண்டர்கள், உறுப்பினர் என அனைவரையும் வேண்டுவது, ஈழதமிழர்களையும், புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களின் கட்டுமானங்களையும் அழித்துவிடாதீர்கள். உங்களால் ஈழமக்களுக்காக உழைப்பவர்களின் பணிகள் தொய்வடையும், அவர்களுக்கு சோர்வை கொடுக்கும். தேசிய தலைவருக்கு இணையாக சீமான் ஒருபோதும் வரமுடியாது, தமிழகத்தில் தேசிய தலைவரை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் தேசிய தலைவரின் உத்தரவால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை அழித்துவிடாதீர்கள். எங்களுக்கு எப்போதும் ஒரே தலைவர் தேசிய தலைவர் மட்டுமே. 
நன்றி என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

click me!