சவுதி அரேபியாவில் அதிர பயங்கர விபத்து... புனித யாத்திரை சென்ற 35 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Oct 17, 2019, 11:20 AM IST
Highlights

சவுதி அரேபியாவில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புனிய யாத்திரை மேற்கொண்ட 35 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

சவுதி அரேபியாவில் லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புனிய யாத்திரை மேற்கொண்ட 35 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 39 பேர் நேற்று ஒரு தனியார் சொகுசு பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பேருந்து மதினாவில் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 35 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பான உடனே போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மதினா மாகாண ஆளுநரும், அந்நாட்டு இளவரசரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

click me!