ஆப்கானிஸ்தானை சுற்றி வளைத்த தாலிபான்கள்.. வேறு வழியில்லாமல் பதவி விலகும் அதிபர் அஷ்ரல் கனி?

By vinoth kumar  |  First Published Aug 15, 2021, 5:02 PM IST

இனி அதிபர் அஷ்ரல் கனியின் அரசாங்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. ஒன்று தலைநகரை தக்க வைத்துக்கொள்ள உக்கிரமான பதில் தாக்குதலை நடத்துவதற்கு ராணுவத்தை தயார்படுத்த வேண்டும். இல்லையென்றால், தாலிபான்கள் படைகளிடம் சரணடைய வேண்டும். தாலிபான்களுடன் அரசுப் படைகள் சண்டையிடுமா அல்லது சரண் அடையுமா?  என்ற கேள்வி எழுந்தது. 


காபூல், தந்தஹார், ஜலாலாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை  தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் பதவியில் அஷ்ரல் கனி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தாலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி  முக்கிய நகரங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தாலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர். 

Tap to resize

Latest Videos

முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தாலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. நாட்டின் 4-வது பெரிய நகரான மசார்-இ-ஷெரீப் நகர்,  நங்கர்காரின் தலைநகர் ஜலாலாபாத் ஆகிய நகரங்களை எந்த எதிர்ப்பும் இன்றி தலிபான்கள் கைப்பற்றினர். இவ்வாறு தொடர்ந்து முன்னேறிய தலிபான்கள் இன்று அதிரடியாக காபூலுக்குள் நுழைந்து சுற்றி வளைத்தனர். 

தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்துள்ளதால், இனி அதிபர் அஷ்ரல் கனியின் அரசாங்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. ஒன்று தலைநகரை தக்க வைத்துக்கொள்ள உக்கிரமான பதில் தாக்குதலை நடத்துவதற்கு ராணுவத்தை தயார்படுத்த வேண்டும். இல்லையென்றால், தாலிபான்கள் படைகளிடம் சரணடைய வேண்டும். தாலிபான்களுடன் அரசுப் படைகள் சண்டையிடுமா அல்லது சரண் அடையுமா?  என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், ரத்த சிந்தாமல் தலைநகர் காபூலை தாலிபான் படைகளிடம் ஒப்படைக்க அரசு படைகள் முன்வந்துள்ளது. இதனையடுத்து, தாலிபான் படைத்தளபதியிடம் ஆட்சி பொறுப்பை அதிபர் அஷ்ரல் கனி ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலில் உள்ள தூதரகங்களில் உள்ள அதிகாரிகளை பத்திரமாக தாயம் அழைத்து செல்ல உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

மேலும், காபூலில் வசிக்கும் அமெரிக்கர்களை பத்திரமாக அழைத்து செல்ல 5000 துருப்புகளை அதிபர் பைடன் அனுப்பியுள்ளார். அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால் தாலிபான்கள் மீது ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!