இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடிப்பு... 25-க்கும் மேற்பட்டோர் பலி..!

By vinoth kumar  |  First Published Apr 21, 2019, 11:10 AM IST

இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் 4 தேவாலயங்கள் மற்றும் 2 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. அப்போது கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயத்திலும், நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனையின் போது இரண்டு வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதுதவிர நட்சத்திர ஹோட்டல்களில்  குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

இதில் பலர் உடல் சிதறி 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கடந்த சில ஆண்டுகளா   அமைதியாக இருந்த இலங்கையில் தற்போது வன்முறை தலைதூக்கியுள்ளது குறிப்பிடதக்கது. 

click me!