பிறப்பதற்க்கு முன்பே தாயின் வயிற்றில் சண்டையிட்ட இரட்டை குழந்தைகள்! வைரலாகும் காட்சி!

By manimegalai a  |  First Published Apr 17, 2019, 12:44 PM IST

சில சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.  இதே போன்ற ஒரு சம்பவம் தான் சீனாவில் அரங்கேறி உள்ளது. பிறப்பதற்கு முன்பே தாயின் கருவறை உள்ளேயே... இரட்டை குழந்தைகள் அன்பாக சண்டையிடும் காட்சி, ஸ்கேன் செய்தபோது தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மருத்துவர்கள் மட்டுமின்றி தாயும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில்,  அவரின் கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் ஸ்கேன் செய்துள்ளார்.

Latest Videos

அப்போது தாயின் வயிற்றில்,  இருந்த இரட்டை குழந்தைகள் ஒன்றோடு ஒன்று,  அன்பாக சண்டையிட்டுள்ளது. இதனைக் கண்ட மருத்துவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். மேலும் இந்த காட்சியைப் பதிவு செய்து இக்குழந்தையின் பெற்றோருக்கும் காட்டியுள்ளார்.

தற்போது இந்த பெண், இரண்டு குழந்தைகளையும் பிரசிவித்துள்ளார். குழந்தைகளுக்கு செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வயிற்றுக்குள் சண்டையிட்ட குழந்தைகளின், வீடியோ காட்சியம் வைரலாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
 
click me!