சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை... பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Apr 13, 2019, 11:03 AM IST
Highlights

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை சில கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.

 

இந்நிலையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்கு பகுதியில் 17 கி.மீ (10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.8 என பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இதே சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது, இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!