புத்தாண்டத்தின் போது சாலை விபத்து... 30 பேர் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Apr 17, 2019, 5:48 PM IST
Highlights

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற அடுத்தடுத்து பல்வேறு சாலை விபத்துகள் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் ஆயிரத்து 270 பேர் மீது புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 ஆயிரம் வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளது. 

இதேபோல், கொழும்பு தேசிய மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

click me!