படிச்சவிங்க பண்ணுன வேலையா இது ! இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam P  |  First Published Apr 25, 2019, 6:59 AM IST

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நன்கு பயின்று வந்த இளைஞர்களே இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். குறிப்பாக தொழில் அதிபர் ஒருவரின் 2 மகன்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கரவாதிகள்  கடந்த ஞாயிறு அன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் அதில் ஒருவர் பெண் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள்  உள்ளூர் தீவிரவாதிகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Latest Videos

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே ,  . இப்போதைய நிலையில் தீவிரவாத குழுவிற்கு வெளிநாட்டு தொடர்பு தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.  தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் 30-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் நடுத்தர வசதிப்படைத்தவர்கள், நன்கு படித்தவர்கள். வெளிநாடுகள் சென்றும் படித்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படித்த இளைஞர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியிவந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக, கொழும்பு நகரில் ஒரு மசாலா நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபரின் 2 மகன்கள், மனித வெடிகுண்டாக செயல்பட்டுள்ளனர். ஒருவன், ஷாங்கிரிலா ஓட்டலிலும், மற்றொருவன் சின்னமன் கிராண்ட் ஓட்டலிலும் குண்டுகளை இயக்கி வெடிக்கச் செய்துள்ளனர். 

இந்த பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். இயக்கத்துடனான தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள், நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

click me!