தேவாலயத்துக்குள் நுழையவிடாமல் தீவிரவாதியை தடுத்து நிறுத்திய இளைஞர் ! பல உயிர்களைக் காப்பாற்றி வீர மரணம்…

By Selvanayagam PFirst Published Apr 24, 2019, 10:51 PM IST
Highlights

இலங்கையின் தற்கொலை தாக்குதலில் தீவிரவாதியை தேவாலயத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்தி நிறுத்திய ரமேஷ் என்ற இளைஞர், குண்டு வெடிப்பில் பரிதாபமாக உயிரிழந்தார்.  தேவாலத்துக்குள் தீவிரவாதியை செல்லவிடாமல் தடுத்து பல உயிர்களைக் காப்பாற்றி அவரது தியாகத்தைத் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
 

கடந்த ஈஸ்டர் தினத்தின்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட  8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 310 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு தேவாலயத்தில் தனது தோளில் கனத்த பையுடன் புதுமுகமாக வருகைத்தந்த தற்கொலைப் படை தீவிரவாதியை  ரமேஷ் என்ற இளைஞர் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அந்த தீவிரவாதி உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆராதனையை படம் பிடிக்க வந்தேன் என கூறியுள்ளார்.

ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத ரமேஷ் தீவிரவாதியை தேவாலயத்துககுள் அனுமதிக்காமல் பலவந்தமாக வெளியே தடுத்து நிறுத்தினார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த தீவிரவாதி தேவாலயத்தின் வாசலிலேயே பலவந்தமாக வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் தீவிரவாதியுடன், ரமேசும் உயிரிழந்தார்.

ஒரு வேளை தீவிரவாதி  தேவாலயத்திற்குள் நுழைந்திருதால்  உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அனேகருடைய உயிரைக் காப்பாற்றிய ரமேஷ் மரணமடைந்தார். ஆனால் அவருடைய செயல் உண்டாகவிருந்த பெரும் நாசத்தை தவிர்ப்பற்கு உதவியாயிருந்தது. 

ரமேஷ் தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளார். ரமேசின் தீரத்தை அனைவரும் போற்றி வருகின்றனர்.

click me!