3 இந்தியர்கள்.. 9 பாகிஸ்தானியர்கள் கைது...! நிலைகுலையவைத்த அதிபயங்கர சம்பவத்தின் அறிக்கை தாக்கல்...

By sathish k  |  First Published Apr 24, 2019, 1:27 PM IST

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தொடர் குன்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொடர் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS பொறுப்பேற்றுள்ளது. 

Latest Videos

இந்நிலையில், ஷங்ரி-லா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு நபர் குறித்தும் அவருக்கு உதவியவர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக வெல்லம்பிட்டிய போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஷாங்ரி-லா ஹோட்டல் மனித வெடிகுண்டு நபர் அவிசாவளை என்ற இடத்தில் செப்பு வயர் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும் அவருக்கு வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைதானாவர்களில் ஒருவர் தமிழர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், மனித வெடிகுண்டு வெடிக்க வைத்தவரின் மனைவி மற்றும் அவரது தாய் தெமட்டகொட என்ற இடத்தில் நடந்த  வெடிவிபத்தில் போலியானதாக  தெரிவித்துள்ளனர்.  

click me!