இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு இவங்கதான் காரணம் !! வெளியான அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam P  |  First Published Apr 23, 2019, 11:14 PM IST

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
 


இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று  அடுத்தடுத்து 8 முறை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். 

Latest Videos

இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ அமைச்சர்  இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. 

அந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

click me!