இலங்கையில் பரபரப்பு... பாகிஸ்தானியர் 6 பேர் கொழும்பில் கைது..!

By Thiraviaraj RM  |  First Published Apr 23, 2019, 5:20 PM IST

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில் கொழும்பு நகரில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 


இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில் கொழும்பு நகரில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கூறியுள்ளது. இலங்கையில் கடந்த இரு தினக்களாக அடுத்தடுத்து 9 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

Latest Videos

இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேறிருப்பதாக ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீண்டும் லாரிகளிலும், வேன்களிலும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு கொழும்பு நகருக்குள் சென்றுள்ளதாக தகவல் பரவியதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். 

இதனால் உச்சக்கட்டப்பாதுகாப்பும், தேடுதல் வேட்டையும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், நீர்கொழும்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18, 23, 24 மற்றும் 25 வயதுடைய அவர்களிடம் இலங்கை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!