என்னத்த கிழிச்சீங்க... கூண்டோடு ராஜினாமா பண்ணுங்க..! இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி.!

Published : Apr 24, 2019, 04:49 PM ISTUpdated : Apr 24, 2019, 04:56 PM IST
என்னத்த கிழிச்சீங்க... கூண்டோடு ராஜினாமா பண்ணுங்க..! இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி.!

சுருக்கம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று 4 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த தொடர்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இன்னும் ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. இலங்கையில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அதிகாரிகள் வனத்தில் கொள்ளவில்லை. இதற்கான இலங்கை மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்டுக் கொண்டது. 

இந்நிலையில் இலங்கை ராணுவ செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!