சுற்றுச்சூழல் குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 1 லட்சம் குரங்குகளை இறக்குமதி செய்வதற்கான சீனாவின் கோரிக்கையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 1 லட்சம் குரங்குகளை இறக்குமதி செய்வதற்கான சீனாவின் கோரிக்கையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள 1 லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு வழங்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது தெளிவாகிறது. toque macaques என்ற குரங்குகள், இலங்கையில் மட்டுமே வாழும் ஒரு இனம்.
இதையும் படிங்க: நடுவானில் வெடித்து சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்... இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றிய நிறுவனத்தின் சிவப்புப் பட்டியலில், சூழல் சீர்கேடால் முற்றிலுமாக அழிந்து போய்விடக்கூடிய வாய்ப்புள்ள உயிரியாக இந்த வகை குரங்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமை இப்படி இருக்கையில் இலங்கையில் இந்த வகை குரங்குகள் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிகளவிலான பயிர் சேதங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரிட்டன் பள்ளிகளில் இந்து வெறுப்பு அதிகரிப்பு: ஹென்றி ஜாக்சன் சொசைட்டி ஆய்வில் தகவல்
இந்த நிலையில், விவசாயிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை தீர்க்கும் வகையிலும், கூடுதல் வருவாயை பெருக்கும் வகையிலும் இலங்கையில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குரங்குகளை சீனாவில் உள்ள தனியார் உயிரியியல் பூங்காவுக்கு வழங்க அந்நாடு முடிவெடுத்துள்ளது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.