இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இதனை இந்தியர்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் நேரலையில் பார்க்க முடிந்தது.
சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால், சூரியனின் ஒளி பூமிக்கு தெரியாமல் மறைக்கப்படும்.. இந்த நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.. பொதுவாக சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம் வளைய கிரகணம் மற்றும் கலப்பின கிரகணம் என 4 வகைகளில் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது.. இது 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் அரிய வகை கலப்பின வகை சூரிய கிரகணம் ஆகும்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த சூரிய கிரகணம் தெரியும்.. இந்தியாவில் இதனை பார்க்க முடியாது..
undefined
ஆஸ்திரேலியாவின் நிங்கலூ பகுதியில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்பதால் இந்த சூரிய கிரகணத்திற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கிய இந்த சூரிய கிரகணம், 12.29 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் இந்த கலப்பின சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.. இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாக பார்க்க முடியாது என்றாலும், நேரலையில் பார்க்க முடியும்..
உலக மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா.. அடேங்கப்பா! எவ்வளவு தெரியுமா?
பகுதி சூரிய கிரகணமும் முழு சூரிய கிரகணமும் இணைந்தால் கலப்பின சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. இந்த வகை கிரகணத்தில், சூரியன் ஒரு சில நொடிகளுக்கு வளையம் போன்ற வடிவத்தை உருவாக்குகிறது.
இந்த ஆண்டின் 2-வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 14-ம் தேதி நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது..