sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியாவுக்கு தப்பிக்கிறார்? சிங்கப்பூருக்கு பறந்தார்

By Pothy RajFirst Published Jul 14, 2022, 12:49 PM IST
Highlights

இலங்கையில் மக்கள் போராட்டத்துக்கு பயந்து, மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியாவுக்கு தப்பிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மாலத்தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டார்.

இலங்கையில் மக்கள் போராட்டத்துக்கு பயந்து, மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியாவுக்கு தப்பிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காக மாலத்தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையி்ல் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் நாட்டின்  பொருளாதாரம் அழிவுக்குச் சென்றுவிட்டது. கடந்த 3 மாதங்களாக  மக்கள் நடத்திய போராட்டத்தைப் பார்த்து, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் விலகினார். 

அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கடந்த 9ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, மக்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.  ஆனால், கோத்தபய ராஜபக்ச, ராணுவ தலைமை அலுவலகத்துக்கு தப்பினார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சபாநாயகர் திடீர் எச்சரிக்கை

இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரமடைந்ததைப் பார்த்த கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து புதன்கிழமை(நேற்று) விலகுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், திடீரென அதிபர் கோத்தபய ராஜபக்ச தனி விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. 

தற்போது மாலத்தீவில் அதிபர் கோத்தபய ராஜபக்ச, அவரின் மனைவி ஆகியோர் தஞ்சமடைந்துள்ளனர். அதிபர் பதவியிலிருந்து புதன்கிழமை விலகுவதாக கோத்பய  ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை ராஜபக்ச ராஜினாமா கடித்ததை வழங்கவில்லை. 

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனா, அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது, விரைவில் ராஜினமா கடிதத்தை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், வேறு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா

இந்நிலையில், மாலத்தீவுகளில் இருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாலத்தீவு அதிகாரிகள் கூறுகையில் “ மாலத்தீவுகளில் இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுவிட்டார். , அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யணும்; இல்லைன்னா அடுத்தது இதுதான் போராட்டக்காரர்கள் கொந்தளிப்பு

click me!