அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே ராணுவ விமானத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவு சென்றடைந்தார்.
இலங்கையில் இருந்து செல்வதற்கு அனுமதித்தால்தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முட்டுக்கட்டை போட்டு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவே ராணுவ விமானத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவு சென்றடைந்தார். மாலேவில் இருக்கும் வெலனா விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பு விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். நேற்று இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த முன்னாள் நிதியமைச்சரும், கோத்தபய ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சேவும் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். இதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அந்த நாட்டு விசா மறுத்தது என்று கூறப்பட்டு இருந்தது.
Sri lanka Crisis : இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்!
இலங்கையின் ராணுவ அமைச்சகத்துக்கும் கோத்தபய ராஜபக்சே பொறுப்பு வகித்தால், நேற்று இரவு விமானப் படையிடம் விமானம் பெற்று மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து இன்று ரணில் விக்ரமசிங்கேவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. போராட்டக்காரர்கள் கொழும்பில் இருக்கும் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த நாட்டின் தொலைக்காட்சியையும் கைப்பற்றி, ஒளிபரப்பை முடக்கினர். வரும் 20ஆம் தேதி அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அதுவரை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரணில் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுதான் இன்று போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர்.
sri lanka crisis: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவியதா?