அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு தப்பி செல்ல அவசர விசா கோரியிருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சேவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு தப்பி செல்ல அவசர விசா கோரியிருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சேவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது. இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.
இதையும் படிங்க: துபாய் தப்பி ஓட முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு: கைது செய்யப்படுகிறாரா?
இதை ஏற்று கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், ரெயில்களில் போராட்டக்காரர்கள் கொழும்பு வந்தனர். இதை அடுத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியானது.
இதையும் படிங்க: துபாய் தப்பிச் செல்ல முயற்சித்த பசில் ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு!!
ஆனால் அதிபர் கோட்டபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை. கோட்டபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா அல்லது இந்தியாவுக்கு தப்பி ஓட திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சே ஏற்கனவே அமெரிக்காவின் குடியுரிமையை வைத்திருந்த நிலையில் கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்கா குடியுரிமையை ரத்து செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு செல்ல அவசர விசா கோரியிருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சேவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.