sri lanka crisis: world bank: இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு

By Pothy RajFirst Published Jul 29, 2022, 4:04 PM IST
Highlights

இலங்கையில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஜிடிபி, பணவீக்கம், உள்ளிட்ட மேக்ரோ எக்னாமிக்(மிகைப் பொருளாதாரம்) காரணிகளைக் சரிசெய்யக் கொள்கைகள் இல்லாதவரை இலங்கைக்கு புதிதாக நிதி உதவி வழங்க முடியாது என்று உலக வங்கி கைவிரித்துள்ளது.

இலங்கையில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஜிடிபி, பணவீக்கம், உள்ளிட்ட மேக்ரோ எக்னாமிக்(மிகைப் பொருளாதாரம்) காரணிகளைக் சரிசெய்யக் கொள்கைகள் இல்லாதவரை இலங்கைக்கு புதிதாக நிதி உதவி வழங்க முடியாது என்று உலக வங்கி கைவிரித்துள்ளது.

சீனாவிடம் கடன் சீரமைப்புத் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்துங்கள் என்று கடந்த இரு நாட்களுக்கு முன் சர்வதேச செலாவணி நிதியம் அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் உலக வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பொருட்களையும் இறக்குமதி செய்ய அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்புஇல்லை. பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. 

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்து 2-வதுமுறையாக 75 புள்ளிகள் உயர்த்தியது

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரசிங்கே பொறுப்பேற்றுள்ளார். பல்வேறு நாடுகள் , உலக வங்கி, சர்வதேச நிதியத்துக்கு ஏற்கெனவே இலங்கை அரசு கடன் தொகையை தர வேண்டியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இப்போதுள்ள மோசமான சூழலிலிருந்து காப்பாற்ற 500 கோடி டாலர் வரை குறைந்தபட்சமாகத் தேவை. ஆனால், இந்தக் கடன் தொகையை வழங்க இதுவரை உலக வங்கி, சர்வதேச நிதியம் ஒப்புக்கொள்ளவில்லை.

இது தொடர்பாகஇலங்கை அரசின் பிரநிதிகள் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியத்திடம் பேச்சு நடத்தி வருகின்றனர். சீனாவிடம் கடன் சீரமைப்புத் திட்டம் குறித்து பேசுங்கள் என்று சர்வதேச நிதியம் ஏற்கெனவே இலங்கையிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

நாட்டை விட்டு வெளியேற ராஜபக்சே சகோதர்களுக்கு நீதிமன்றம் தடை

இந்நிலையில் உலக வங்கியின் கதவுகள் திறக்கப்படும், நிதி உதவி தரப்படும் என இலங்கை அரசு நம்பியிருந்தது. அந்த நம்பிக்கையிலும் தற்போது மண் விழுந்துவிட்டது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் மேக்ரோ பொருளாதாரக் காரணிகளை சரி செய்யக்கூடிய கொள்கைகளை உருவாக்காதவரை இலங்கைக்கு புதிதாக எந்த நிதி உதவியும் வழங்க திட்டம் ஏதும்இல்லை. 

இலங்கையில் மிகவும் ஆழ்ந்த கட்டமைப்பு ரீதியான பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் சீர்திருத்தங்கள் தேவை. பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும், எதிர்காலத்தில் இந்த பொருளாதாரச்சிக்கலில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.  இலங்கையில் வரும் மேம்பாட்டு, முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதாரச் சூழல், மக்கள் படும் அவதி எங்களுக்கு கவலையளிக்கிறது. ஏற்கெனவே நாங்கள் வழங்கியுள்ள கடன்களி்ன் கீழ் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பணப் பரிமாற்றம் போன்றவற்றுக்காக நாங்கள் உதவி செய்கிறோம். இதற்காக 16 கோடி டாலர் நிதியை அவசரத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வழங்குகிறோம். 

இலங்கை முன்னாள்அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்

ஏழைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருக்கும் மக்களுக்கும் உரிய பலன்கள் சென்று சேர்கிறதா என்பதை அரசுடன் சேர்ந்து உலக வங்கியும் கண்காணிக்கும். இலங்கையின் வளர்ச்சிக்கு உதவிடும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து, இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க ஆதரவு அளிப்போம்” எனத் தெரிவித்துள்ளது

click me!