இதன் அங்கமாக முதலீட்டாளர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு தொடங்கி இருக்கிறது.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு என ஏராள பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்: crisis in sri lanka: இலங்கையில் 2022ம் ஆண்டுக்குள் உணவு இல்லாமல் போகலாம்! தபால் சேவை நாட்களும் குறைப்பு
இந்த நிலையில், இலங்கையை மீட்டு எடுக்க அந்நாட்டு அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கையில் அன்னிய நேரடி முதலீடுகளை பெரும் அளவில் ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அங்கமாக முதலீட்டாளர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு தொடங்கி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: இலங்கையை கடனில் இருந்து மீட்குமா சர்வதேச நிதி ஆணையம்; எரிபொருளுக்கு டோக்கன் அறிமுகம்
தற்போதைய விசா நடைமுறை:
தற்போதைய சூழலில் வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கை விசாக்களை பெற ஆண்டு தோறும் மிகப் பெரும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதற்கு ஏராளமான ஆவணங்கள் சமர்பிப்பு, அதன் பின் அவற்றை சரிபார்ப்பது என ஏராள நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இது போன்ற சிக்கலான நடைமுறைகளை தவிர்த்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தான் ஐந்து ஆண்டுகளுக்கு விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கி இருக்கிறது. இந்த விசாக்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் முதற்கட்டமாக அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கான விசா வழங்கப்படும்.
இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இலங்கை கிளை லங்கா ஐ.ஒ.சி. நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா உள்பட பத்து பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கான விசா வழங்கும் திட்டத்தை இலங்கை முதலீடு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தம்மிகா பெரோரா தொடங்கி வைத்தார்.
களத்தில் இறங்கிய ஜப்பான்:
முன்னதாக இலங்கை அரசுக்கு உதவ முடியாது என அறிவித்து இருந்த ஜப்பான், தற்போது உதவ முன்வந்து இருக்கிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹடகி இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் இலங்கை உடனான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் கடினமான பொருளாதார சூழல் குறித்து ஜப்பான் கவனித்து வருகிறது. இலங்கை மக்களுக்கு மருந்து மற்றும உணவு ஆகியவற்றை வழங்க யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் சார்பில் சுமார் மூன்று மில்லயன் டாலர்கள் அவசர கால உதவியாக வழங்க ஜப்பான் முடிவு செய்து இருக்கிறது. இது பற்றிய தகவல் ஜப்பான் நாட்டு தூதரகத்தின் பேஸ்புக் அக்கவுண்டில் குறிப்பிப்பட்டு உள்ளது,